“உங்களுக்கு அறிவே கிடையாது” சனம் ஷெட்டியை திட்டிய ஷிவானி !

334

பிக்பாஸ் சீசன் 4….

நேற்று உல்டாவான அரக்கர்கள் Vs அரசர்கள் டாஸ்க்கில் அரசர்கள் மீது லெமன் ஜூஸ் கண்ணுக்குள் அடிப்பது, ஸ்ப்ரே அடிப்பது, காதுகள் அருகில் வந்து பாத்திரங்களை வைத்து சத்தம் போடுவது என பல கொடூர வழிகளில் அரசர் குடும்பத்தை அரக்கர்கள் டீம் வெறுப்பேற்றியது.

இதனால் பிக்பாஸ் வீடே பற்றியெரிய இதற்கும் தனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது போல ரம்யா அமைதியாக தன்னுடைய வேலையை பார்த்து கொண்டிருந்தார்.

இந்த அரக்கர்கள் குடும்பத்தை சேர்ந்த பாலாஜி, சனம் வெறுப்பேற்றும் வேலையை சிறப்பாக செய்தனர். இதைப்பார்த்த ஷிவானி எரிச்சலாகி “ஏன் இதுமாதிரி பண்றீங்க?” என சனமை கேட்டார்.

பதிலுக்கு சனம், “நேத்து உங்களுக்கு இந்த அறிவு இல்லன்னு பொறாமை”,என Counter கொடுக்க பதிலுக்கு ஷிவானி, ”உங்களுக்கு அறிவே இல்லை,” என்றார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் “அப்பாடா ஒரு வழியா ஷிவானி பேசிட்டாங்க” என, ஷிவானியை புகழ்ந்து பேசி மீம்ஸ் போடுகிறார்கள்.