குப்பை சேகரித்து பிழைப்பு நடத்துபவரின் மகன் : எய்ம்ஸ் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி அசத்தல்!!

467

இந்தியாவில் குப்பை சேகரித்து பிழைப்பு நடத்துபவரின் மகன் எய்ம்ஸ் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி சாதித்து காட்டியுள்ளார்.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் தேவாஸ் நகரை சேர்ந்தவர் ஆஷாராம் சவுத்ரி (18). இவரது தந்தை தெருவோர குப்பைகளில் இருந்து விலைபோகும் பொருள்களை சேகரித்து விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார்.

சவுத்ரி வீட்டில் மின்சாரமும் கிடையாது, கழிப்பறையும் கிடையாது. இருப்பினும். ஆஷாராம் சவுத்ரி அரசு பள்ளியில் படித்து சக மாணவர்களுடன் போட்டி போட்டு படித்து வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த மே மாதம் 6ம் திகதி நடைபெற்ற மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் ஆஷாராம் சவுத்ரி 803வது இடம் பிடித்து பெற்று தேர்ச்சி அடைந்தார், அதன்பின்னர், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு மே 27ம் திகதி நடைபெற்றது. இதில் ஆஷாராம் தேர்வெழுதினார்.

இதன் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. மொத்தமுள்ள 707 இடங்களில் 141வது இடம் பிடித்து முதல் முயற்சியிலேயே ஆஷாராம் தேர்வாகியுள்ளார்.

இது குறித்து ஆஷாராம் கூறுகையில்,எய்ம்ஸ் மருத்துவமனை நுழைவு தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நரம்பியல் நிபுணர் ஆவதே எனது இலக்கு. எனது சொந்த கிராமத்துக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகளை பெற்று தருவேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.