பெண்ணாக மாறிய 14 வயது சிறுவன் : பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

578

பிரித்தானியாவில் பெண்ணை போல வேடமிட்டு நடிக்க முயன்ற சிறுவனின் நிகழ்ச்சிக்கு திடீரென பள்ளி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பிரித்தானியாவின் West Midlands-ல் Dudley பகுதியில் செயல்பட்டு வருகிறது Castle உயர்நிலைப்பள்ளி மற்றும் விஷுவல் காலை மற்றும் அறிவியல் கல்லூரி. இங்கு மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நிகழ்ச்சி ஒன்று நடைபெற விருந்து.

செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த அப்போட்டியில் ஏராளமான மாணவர்களுடன் இணைந்து, Lewis Bailey (14) என்ற சிறுவனும் கலந்து கொள்ள இருந்தான். பெண் வேடமிட்டு நடனமாடுவதில் மிகவும் பிரபலமான RuPaul- ன் நடனத்தை பார்த்து, அதைப்போன்று தானும் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆர்வத்தில் Lewis-ம் இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ளான்.

இதற்காக கடந்த சில வாரங்களாகவே கடுமையான பயிற்சிகளையும், அவனது தாய் Natalie (37) உதவியுடன் பெற்று வந்துள்ளான். இந்த நிலையில் திடீரென அவனது நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அவனது தாய் Natalie கூறுகையில், ஒரு ஆண் பெண் வேடமிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என எந்த சட்டமும் கூறவில்லை.

அவனது நடனத்தில் எந்தவிதமான ஆபாசமும் இடம் பெறவில்லை. ஆனால் எதற்காக அவர்கள் இப்படி செய்தார்கள் என தெரியவில்லை. ஒரு வேளை மற்ற மாணவர்களின் பெற்றோருக்கு இந்த நிகழ்ச்சி பிடிக்காமல் போய் விடுமோ என்ற எண்ணத்தில் செய்திருக்கலாம். இது நிகழ்ச்சி தானே தவிர போட்டி அல்ல.

இதற்காக மிகுந்த ஆசையுடன் பயிற்சி பெற்ற Lewis, தற்போது மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறான் என வேதனை தெரிவித்தார்.

பின்னர் இதுகுறித்து பேசிய தலைமையாசிரியர், Lewis இன்னும் 18 வயதை தாண்டவில்லை. அதனால் தான் அவருடைய நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளோம் என விளக்கமளித்துள்ளார்.