இன்றைய ராசிபலன் (29-06-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

705

இன்றைய ராசிபலன்…

மேஷம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.‌ உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

மிதுனம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தினருடன் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதல் வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

கடகம்

எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். சகோதரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதுமுதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

சிம்மம்

உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

கன்னி

மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு. சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதித்துக் காட்டும் நாள்.

துலாம்

உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

விருச்சிகம்

சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். மற்றவர்களையும் முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். சகோதரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

தனுசு

தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மகரம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கு விஷயங்கள் சாதகமாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கும்பம்

குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம் -பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மனதில் நிறைவு பெறும் நாள்.

மீனம்

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்ப்புகள் விலகும் நாள்.