13 வயது சிறுமியை காதலித்த 15 வயது சிறுவன் : இதற்காகத் தான் அத்தையை கொலை செய்தேன் என பகீர் வாக்குமூலம்!!

186

தமிழகத்தில் அத்தையின் மணிக்கட்டை வெட்டி கொலை செய்த சிறுவன் காதலை கண்டித்ததால், அவரை கொலை செய்தேன் என அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த தம்பதி சங்ககரசுப்பு-தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்நிலையில் தமிழ்ச்செல்வி கை மணிக்கட்டில் கத்தியால் வெட்டப்பட்டு அவரது வீட்டில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் தமிழ்ச்செல்வியின் வீட்டிற்கு சம்பவ தினத்தன்று உறவினர் மகன் வந்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் அவரை பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது குறித்து சிறுவன் அளித்த வாக்குமூலத்தில், அத்தை தமிழ்ச்செல்வியின் 13 வயது மகளை தான் காதலித்ததாகவும், அதைக் கண்டித்ததால் அத்தையை கொன்றதாகவும் கூறியுள்ளான்.

கரடி பொம்மையை முகத்தில் வைத்து அழுத்தி மூச்சுத் திணற வைத்து கொன்றதாகவும், பின்னர் கை மணிக்கட்டை வெட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுவனை கைது செய்துள்ள பொலிசார் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.