நடிகை ஐஸ்வர்யா ராய் குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்!!

174

நடிகை ஐஸ்வர்யா ராயின் நாத்தனாரான ஸ்வேதாவின் மாமனார் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அமிதாப்பச்சனுக்கு அபிஷேக் பச்சன் மற்றும் ஸ்வேதா பச்சன் என இரு பிள்ளைகள் உள்ளனர். அபிஷேக் பச்சன் நடிகை ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் அபிஷேக் பச்சனின் சகோதரியும், ஐஸ்வர்யாராயின் நாத்தனாருமான ஸ்வேதாவின் மாமனார் ராஜன் நந்தா நேற்று மரணமடைந்தார்.

சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் பிரிந்தது.

தங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்ததற்காக இரங்கல் தெரிவித்த ரசிகர்களுக்கு அமிதாப்பச்சன் டுவிட்டரில் மனம் உருக நன்றி தெரிவித்துள்ளார்.