உடல் முழுவதும் பச்சை குத்திய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

122

பிரித்தானியாவில் பச்சை குத்திக்கொண்ட ஒரு பெண்ணின் கையில் திடீரென தோல் உரிந்து விழுந்து கொடூரமான காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த Toni Mansfield (28) என்ற பெண் பச்சை குத்துவதால் அளவு கடந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயான Toni-கு கடந்த சில நாட்களுக்கு முன்பு Studio Thir13en என்ற கடையில், தன்னுடைய கையில் “இளஞ்சிவப்பு” நிறத்திலான பச்சை குத்தியுள்ளார்.

பின்னர் சில நாட்கள் கழித்து திடீரென ஏற்பட்ட அப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய காயத்தால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டார்.

அங்கு பரிசோனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவருக்கு பச்சை குத்தியதன் மூலம் ஒட்டுண்ணி தாக்கம் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளனர்.

பின்னர் இதுதொடர்பான புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்ட Toni, அந்த கடையில் பச்சை குத்திய உடனே என்னுடைய கையில் பயங்கர வலி ஏற்பட்டது. அதற்கு அவர்கள் ஒரு தைலத்தை கொடுத்து அதன் மேல் தேய்க்க சொன்னார்கள்.

ஆனால் அந்த வலி மட்டும் சிறிதளவு கூட குறையவேயில்லை. வலியை தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு என வலி ஏற்பட்டது. பின்னர் அடுத்தநாள் காலையில் திடீரென கையில் இருந்த தோல் உதிர்ந்து விழுந்ததுடன், பெரும் காயமும் ஏற்பட்டது. இதுதொடர்பாக நான் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வருகிறேன்.

சம்மந்தப்பட்ட நிறுவனம் நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விட்டனர். ஆனால் அந்த நிறுவனம் மீது என்னால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை. ஏனெனில் நான் பச்சை குத்தி கொள்வதற்கு முன்பு ஒரு ஒப்பந்த பாத்திரத்தில் கையெழுத்திட்டிருந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.