பட்டப்பகலில் இளம் பெண்ணை துடி துடிக்க குத்தி கொலை செய்த இளைஞன்!!

110

இந்தியாவில் காதலை தெரிவித்த போதும், அந்த பெண் அதற்கு பதில் கூறாததால், இளைஞர் ஒருவர் அவரைபல முறை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் தானே பகுதியின் Regional Transport அலுவலகத்திற்கு பக்கத்தில் Prachi Zade(20) என்ற இளம் பெண்ணை அடையாளம் தெரியாத நபர் நேற்று காலை 10.30 மணியளவில் பலர் இருக்கும் நேரத்தில் பல முறை அவரை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டான்.

இதனால் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்த Prachi Zade சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகினார். சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், சம்பவ தினத்தன்று Akash Pawar(25) என்ற இளைஞன், இரு சக்கர வாகனத்தில் சென்ற Prachi Zade-ஐ தடுத்து நிறுத்தியுள்ளார்.

Akash Pawar இந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும், தனது காதலை அந்த பெண்ணிடம் கூறிய போதும் அவர் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் பேசாமல் இருந்ததாக கூறப்படுது.

இதன் காரணமாக சம்பவ தினத்தன்று வந்த இளைஞன், அவரிடம் பேசிய போது மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் Prachi Zade-ஐ சம்பவ இடத்தில் வைத்தே பல முறை குத்தி கொலை செய்துள்ளார்.

மேலும் பொலிசார் கூறுகையில், Prachi Zade-ஐ பின் தொடர்ந்து வந்த இந்த இளைஞன், சில கிலோ மீற்றர் சென்றவுடன் தடுத்து நிறுத்தி பேசியுள்ளான்.

அவன் வரும் போதே ஒரு திட்டத்துடன் தான் வந்துள்ளான். இரு சக்கர வாகனத்தின் பின் சீட்டில் ஒரு கத்தியும், தன்னுடைய பாக்கட்டில் ஒரு கத்தியும் வைத்திருந்துள்ளான்.

பேசிய போது அந்த பெண் மறுத்ததால், பல முறை குத்தி கொலை செய்துள்ளான் என்று கூறியுள்ளனர்.

மேலும் Prachi Zade குடும்பத்தினர் ஏற்கனவே அந்த இளைஞன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்ததாகவும், அப்போது பொலிசார் இளைஞரை எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.