இந்த வாரம் கோடி கோடியாக கொட்டப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

642

மேஷம்:நிர்வாகம் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக கொஞ்சம் நிதானமாக செயல்படுங்கள். தன வரவில் இதுவரை இருந்து வந்த சின்னச் சின்ன தடைகள் விலக ஆரம்பிக்கும். உங்களுக்கு சம வயதினருடன் கவனமாக இருங்கள். ஒருவிதமான பய உணர்வு உங்களுக்குள் வந்து போகும். அதனால் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். பணி நிமிர்த்தமாக அலைச்சல்கள் உண்டாகும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் கைக்கு வந்து சேரும். உயர் அதிகாரிகளின் மூலமாக உங்களுக்கு பலன்கள் கிடைக்கும். பொதுக்கூட்டங்களி்ல பேசுகின்ற போது, உங்களுக்கு ஆதரவுகள் பெருகும். புதிய வீடு, மனை வாங்குவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்:வேலையில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். உறவினர்களுடன் உரையாடுகின்ற போது, பேச்சுகளில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சிகளிலும் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். தொழிலிலும் எதிர்பாராத சுப செய்திகள் வரும். அதனால் சிறு சிறு சுப விரயச் செலவுகளும் உண்டாகும். அலுவலகப் பணிகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தாயைப் பற்றிய கவலை அதிகரிக்கும். மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் மேலோங்கும். மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். பெருமாளை வழிபடுங்கள்.

மிதுனம்:தொழில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களில் நீங்கள் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.காலநடைகளிடம் கொஞ்சம் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். உங்களுடைய பெருந்தன்மையான செயல்பாடுகளினால் உங்கள் மீதான மதிப்புகள் உயர ஆரம்பிக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் சுப செய்திகள் காதுகு்கு வந்து சேரும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டப்படுவீர்கள். உங்களில் சிலருக்கு ஆடை, ஆபரணங்கள் சேர்க்கைகள் உண்டாகும். மகாலட்சுமியை வழிபடுங்கள்.

கடகம்:நண்பர்களின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவினால் மகிழ்ச்சி அடைவீர்கள். உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தூர தேசங்களில் செய்யும் பயணங்களினால் ஏற்பட்ட சிக்கல்கள் கொஞ்சம் குறையும். உங்களுடைய முயற்சிகளால் உங்களுடைய சேமிப்புகள் உயர ஆரம்பிக்கும். காரியங்களில் சின்ன சின்ன தடைகள் உண்டாகும். அதனால் காலதாமதங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நட்பு உண்டாகும். உங்களுடைய கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும். தொழில் துறையில் இருக்கும் போட்டிகளை மிக எளிதாக சமாளிப்பீர்கள்.

சிம்மம்:உங்களுக்கு மேல் தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் நன்மைகள் உண்டாகும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபட ஆரம்பிக்கும். காரிய சித்தி ஏற்படுவதற்கு சில சில இன்னல்கள் மற்றும் தாமதங்கள் ஏற்பட்டாலும் அதனை செய்து முடிப்பீர்கள். வாகனப் பயணங்களில் கொஞ்சம் நிதானங்கள் வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அனுசரணையோடு நடந்து கொள்ளுங்கள். புதிய வர்த்தகங்கள் சம்பந்தமான முதலீடுகள் அதிகரிக்கும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களழல் நீங்கள் எண்ணிய முடிவுகள் கிடைக்கும்.

கன்னி:புனித யாத்திரைகள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தேவையில்லாத வீண் அலைச்சல்களைத் தவிர்த்து விடுங்கள். சக பணியாளர்களிடம் கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டும். வியாபாரங்களில் கொஞ்சம் கூடுதல் லாபங்கள் கிடைக்கும். வியாபாரங்களில் லாபம் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும். பங்குதாரர்களால் தொழிலில் அனுகூலங்கள் உண்டாகும். உங்களுடைய எடுத்துரைக்கின்ற பேச்சுத் திறனால் லாபம் உண்டாகும். நீங்க்ள திட்டமிட்ட பணிகளை இனிதே முடித்து வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் கவனம் வேண்டும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

துலாம்:உங்களுடைய தொழில் சார்ந்த முயற்சிகளால் தன லாபங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களாக இருந்தால் உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் குறைவதற்கான சூழல்கள் உண்டாகும். வீடு, மனை விவகாரங்களில் இருந்து வந்த சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். செய்கின்ற பணிகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் உள்ள குழந்தைகளின் எண்ணப் போக்கிற்கு ஏற்ப கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது. மனைவி வழியிலான உறவினர்களிடம் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடியும். சிலருக்கு திடீர் பொருள் வரவுகள் உண்டாகும்.

விருச்சிகம்:உயர் அதிகாரிகளுடைய நிதானப் போக்கைக் கடைபிடிக்கவும். இதுவரை தடைபட்டுக் கொண்டே இருந்த செயல்களை இனிதே செய்து முடிப்பீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் கைகூடி வரும். உங்களுடைய பொருளாதார நிலைகளை உயர்த்துவற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதுக்குள் புதுவிதமான தன்னம்பிக்கைகள் அதிகரிக்கும். சாஸ்திரங்கள் மேலான ஞானம் மேம்படும். வேள்விகள் சம்பந்தப்பட்ட பணியில் ஈடுபடுவீர்கள். பொது செயல்கள் மூலம் பெரும் புகழ் உண்டாகும். பொதுச் செயல்க்ள மூலமாக கீர்த்தி உண்டாகும். தந்தையுடன் எழுந்த பிரச்னைகள் குறைய ஆரம்பிக்கும்.

தனுசு:மனதுக்குள் புதுவிதமான ஆராய்ச்சி பற்றிய எண்ணங்கள் தோன்றும். தொழிலில் இடையூறுகள் நீங்கி, சேமிப்புகள் அதிகரிக்கும். வேளாண்மையில் இதுவரை ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும். உங்களுடைய புதிய செயல் திட்டங்களை உருவாக்குவீர்கள். பிள்ளைகளுடைய ஆதரவு பெருகும். போட்டிகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாம். நண்பர்களுடைய சந்திப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களுடைய வருகையினால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய வேலை சம்பந்தப்பட்ட முயுற்சிகளில் நல்ல செய்திகளி உண்டாகும். பெண்கள் மூலம் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். துர்கா தேவியை வழிபட்டு வாருங்கள்.

மகரம்:உடன் பணிபுரியும் சக பணியாளர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். உங்களுடைய உடல் நலத்தில் கவனம் வேண்டும். பயணங்களில் கொஞ்சம் நிதானம் தேவை. செலவுகள் அதிகரித்தாலும் உங்களுக்குத் தேவையான பணம் கையில் இருப்பதால் கொஞ்சம் சமாளித்துவிடலாம். பிள்ளைகளின் மூலம் பெருமையடையும் வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரங்களில் புதிய முயற்சி உங்களுக்கு சாதகமாக முடியும். நீங்கள் எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் உங்களுக்கான பணிகளை சக ஊழியர்களின் ஆதரவினால் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாய்வழியிலான உறவுகளால் செலவுகள் உண்டாகும். வியாபாரஙக்ளில் விறபனை கொஞ்சம் மந்தமாகவே காணப்படும்.

கும்பம்:புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். கலை சம்பந்தப்பட்ட பயிற்சிகளில் முன்னேற்றங்கள் ஏற்படும். அறச் செயல்களுக்கான தேவையான உதவிகளைச் செய்து முடிப்பீர்கள். தண்ணீர் சம்பந்தப்பட்ட பணிகளில் எண்ணிய லாபங்கள் கைக்குக் கிடைக்க கால தாமதங்கள் ஏற்படும். எதிர்பார்த்த முடிவுகளில் உங்களுக்கு சாதகமற்ற சூழல்கள் ஏற்படும். இணைய தளங்களின் வாயிலான பணிகள் மூலம் நல்ல லாபங்கள் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். புதிய வீடு, மனைகள் வாங்குவதற்கான செயல் திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

மீனம்:உங்களுடைய எந்த முக்கிய முடிவுகளையும் பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுங்கள். சொந்த பந்தங்களிடம் கோபமாக நடந்து கொள்ளாதீர்கள். வியாபாரங்களில் ஏற்ற இறக்கமான சூழல்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த வேலைகள் முடிவதில் தாமதங்கள் உண்டாகும். மனதுக்குள் ஒரு விதமான பதற்றமான சூழல்கள் உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் ஏற்படும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தேவையில்லாமல் தலையிடுவதைத் தவிர்க்கவும். முக்கிய ஆவணங்களைக் கையாளுகின்ற போது கொஞ்சம் கவனமாக இருங்கள்.