160 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஓவியத்தை திருடியது எப்படி? அவிழ்ந்த மர்ம முடிச்சு

614

அமெரிக்காவின் புகழ் பெற்ற அரிஸோனா மியூஸியத்திலிருந்து 160 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஓவியத்தை திருடிய தம்பதி, எப்படி திருடினார்கள் என்பது குறித்த சுவாரஸ்ய பின்னணி வெளியாகியுள்ளது.

New Mexicoவைச் சேர்ந்த Jerry Alterம் அவரது மனைவியான Ritaவும் அரிஸோனா மியூஸியத்திருந்த புகழ்பெற்ற Willem de Kooning வரைந்த ‘Woman-Ochre’ என்னும் ஓவியத்தை திட்டமிட்டுத் திருடிச் சென்றார்கள்.

1985ஆம் ஆண்டு Thanksgiving தினத்திற்கு மறுநாள் மியூஸியம் ஊழியர் ஒருவர் உள்ளே செல்வதற்காக மியூஸியத்தின் பாதுகாவலர் அதன் கதவைத் திறந்தபோது ஒரு ஆணும் ஒரு அழகிய இளம்பெண்ணும் அங்கு வந்தனர்.

அந்த இளம்பெண் பாதுகாவலரிடம் பேச்சுக் கொடுக்க அந்த ஆண் மியூஸியத்திற்குள் நுழைந்தார்.இளம்பெண்ணுடன் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்த பாதுகாவலர், அந்த ஆண் உள்ளே போவதைக் கண்டும் அவரைத் தடுக்கவில்லை.அவர் அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததால் அவரைத் தடுக்காமல் விட்டு விட்டாரா என்பது தெரியாது.

ஆனால் அவரை விசாரித்தபோது, அந்த நாள் பார்வையாளர்களை அனுமதிக்கும் நாள்தான் என்பதாலும், எப்படியும் இன்னும் சிறிது நேரத்தில் மியூஸியத்தை பார்வையாளர்களுக்காக திறக்க வேண்டியதுதான் என்பதாலும் அவரைத் தடுக்காமல் விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறிது நேரத்தில் மியூஸியத்திற்குள் சென்ற அந்த ஆண் திரும்பி வரவும், அவரும் அந்த இளம்பெண்ணும் ஓடாத குறையாக சிவப்பு நிற காரில் ஏறி விரைந்திருக்கின்றனர்.

அவர்கள் ஓடுவதைக் கண்டதும் பாதுகாவலருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. மியூஸியத்திற்குள் அவர் சென்று பார்த்தபோதுதான் அந்த விலை மதிப்பற்ற ஓவியம் திருடு போயிருந்ததை அவர் கண்டிருக்கிறார்.அந்த காலகட்டத்தில் CCTV கெமராக்கள் பொருத்தப்படாததால் அவர்களை அடையாளம் காணுவது கடினமாக இருந்தது.

பாதுகாவலர் சொன்ன அடையாளங்களை வைத்து அவர்களது படங்கள் வரையப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டும், அவர்கள் இறக்கும் வரை அவர்களை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்பதுதான் கதையின் சுவாரஸ்ய முடிவு.