எட்டாவது மாடியிலிருந்து விழுந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

91

சீனாவில் எட்டாவது மாடியிலிருந்து விழுந்த ஒரு ஏழு வயது சிறுவனை கீழே நின்றவர்கள் ஒரு பெட்ஷீட்டை விரித்து காப்பாற்ற முயன்றபோதும் அவனை காயங்களின்றி காப்பாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

சீனாவின் Chongqing பகுதியில் ஒரு ஜன்னலிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டதும் அக்கம் பக்கத்தோர் உடனடியாக ஒரு பெட்ஷீட்டை விரித்துப் பிடித்தவாறு அவனுக்கு நேர் கீழே நின்றனர்.

கைகால்களை உதைத்தவாறு தொங்கிக் கொண்டிருந்த அந்த சிறுவன் கை வழுக்கி கீழே விழுந்தான்.

கீழே நின்றவர்கள் பெட்ஷீட்டை விரித்துப் பிடித்திருந்தபோதிலும் அந்த சிறுவன் விழுந்த வேகத்தில் பெட்ஷீட் கிழிந்து அவன் தரையில் சென்று மோதினான்.

கீழே விழுந்த அவன் சுய நினைவின்றி கிடக்கவே அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவன், ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.