நான் சிகப்பா, அழகா இருக்கேன்.. கைது பண்ணாதீங்க: இளம்பெண்ணின் பேச்சுக்கு கிடைத்த தண்டனை!!

77

கரோலினாவில் மது அருந்திய வாகனம் ஒட்டிய இளம்பெண் ஒருவர், நான் அழகாக இருக்கிறேன் என்னை கைது செய்யாதீர்கள் என கூறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு கரோலினா மாகாணத்தின் Bluffton பகுதியில் 33 வயதான Lauren Elizabeth என்ற பெண் வேகமாக காரில் சென்றுள்ளார். இதனை பார்த்த ரோந்து பொலிஸார் ஒருவர் அந்த பெண்ணின் வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்துள்ளார். அதில் Elizabeth மது அருந்தியிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை பொலிஸார் கைது செய்ய முயன்ற போது, நான் உயர் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவள். நான் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டதில்லை. என்னை இப்போது கைது செய்தால் என் வாழ்க்கை பாதிக்கப்படும் என கூறியுள்ளார்.

பின்னர் அவரது கையில் விலங்கிட்டு சிறைக்கு அழைத்து சென்றிருந்த பொழுது, நான் சிகப்பாக, அழகான ஒரு சுத்தமான பெண்ணாக இருக்கிறேன் என கூறியுள்ளார். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என பொலிஸார் கேள்வி எழுப்பியதற்கு, நீங்கள் ஒரு பொலிஸ் நான் சொல்வதை நீங்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும் என பேசியுள்ளார்.

மேலும், தன்னுடைய நண்பர் கூட பொலிஸாராக இருப்பதாகவும், ஞாயிற்றுக்கிழமையானால் அவருடைய வீட்டிற்கு செல்வேன் என கூறியுள்ளார். சம்மந்தப்பட்ட பெண் கூறிய எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட அந்த பொலிஸார், இறுதியில் மது அருந்திவிட்டு வேகமாக வாகனம் ஒட்டியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பெண்ணை சிறையில் அடைத்தார்.

இதுகுறித்து அந்த பொலிஸார், செய்யும் தவறை இதுபோன்ற ஒருசிலர் நியாயப்படுத்துவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வர். இவரை போல நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேன் என தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.