தூக்கில் தொங்கி தற்கொலை : ஒரு கல்லூரி மாணவியின் உருக்கமான முடிவு!!

107

தென் ஆப்பிரிக்காவில் கல்லூரி மாணவி ஒருவர் தான் பலாத்காரத்துக்குள்ளானதால் வேதனையடைந்து சமூகவலைதளத்தில் அதற்கான காரணத்தை தெரிவித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Grahamstown – வில் செயல்பட்டு வரும் Rhodes பல்கலைக்கழகத்தில் Khensani Maseko என்ற மாணவி மூன்றாமாண்டு சட்டப்படிப்பு பயின்று வந்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவியான இவர், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்த திகதி மற்றும் தனது இறப்பின் திகதியை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யாரும் பலாத்காரம் செய்வதை ஏற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவர்கள் கிடையாது என்ற பதிவிட்டுள்ளார். இவ்வாறு பதிவிட்ட அன்று இவர் தற்கொலை செய்துகொண்டார், ஆனால் இந்த பதிவை பார்த்த இவரது நண்பர்கள் இவர் தற்கொலை செய்துகொள்ளப்போகிறார் என்பதை அறியவில்லை.

இவர், பல்கலைக்கழகத்தில் யாரோ ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் மனம் உடைந்து தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

இவரது இறப்பு கல்லூரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர் இறந்த அன்று கல்லூரி மூடப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரது இறப்பிற்கு பின்னணியில் இருக்கும் நபர் குறித்து விசாரணை நடத்தப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.