சுளுக்கினால் அவதியா? இதோ எளிய வைத்தியம்

1125

பொதுவாக அனைவக்கும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளின் ஒன்று தான் சுளுக்கு.ஒடிக்கொண்டிருக்கும் போது கால் பிறளுவதாலோ, ஒடிக்கொண்டிருக்கும் பஸ்ஸைவிட்டு இறங்குவதாலோ சில சமயம் ஏற்படும் முழங்கால் கணுக்காலிலுள்ள எலும்புகளை இணைக்கும் சவ்வுகள் பாதிக்கப்பட்டு அவ்விடத்தில உள்ளே ரத்தக் கசிவும், நிண நீர்க்கசிவும் ஏற்பட்டு மிகுதியான வீக்கமும் வலியும் ஏற்படும் இதனையே சுளுக்கு என்பார்கள்.

அதனை விரட்ட நாம் வீட்டு வைத்தியங்களை கையாளுவோம்.ஜாதிக்காயை உடைத்து அதோடு சிறிது பால் சேர்த்து நான்கு அரைத்து பிறகு அதை கொதிக்க வைத்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட வேண்டும். ஒரு நாள் கழித்து அதை வெந்நீரில் கைவிட்டு மீண்டும் இதே போல பற்று போட வேண்டும். இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் பற்று போட்டால் சுளுக்கு நீங்கும்.

பூண்டை உரித்து எடுத்துக்கொண்டு அதோடு சிறிது உப்பு சேர்த்து இரண்டையும் நன்கு இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் பற்று போட்டால் விரைவில் சுளுக்கு சரியாகும்.பிரண்டையை நன்கு பிழிந்து சாறு எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் மற்றும் உப்பை சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். பிறகு அதை இதமான சூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் தடவி வந்தால் சுளுக்கு நீங்கும்.

முருங்கை பட்டையோடு பெருங்காயம், கடுகு மற்றும் சுக்கை சேர்த்து நன்கு அரைத்து சூடு செய்து, இதமான சூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட்டால் சுளுக்கு நீங்கும்.கையில் சுளுக்குள்ளவர்கள், கற்ப்பூரத்தையும் மிளகு தூளையும் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதை ஒரு துணியில் நனைத்து கையில் எந்த இடத்தில் சுளுக்கு உள்ளதோ அங்கு போடலாம்.