சினிமா பாணியை மிஞ்சிய சம்பவம்: விஷ ஊசியை போட்டு பரிதாபமாக இறந்த நபர்.. சிக்கிய மனைவியின் காதலன்!!

1134

ஆந்திராவில்..

ஆந்திர மாநிலம் கம்மம், பொப்பரானி கிராமத்தை சேர்ந்தவர் ஜமீல்(45). இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, நபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அவருக்கு லிப்ட் கொடுத்ததும், சிறிது தூரம் செல்லும்போது, ஜமீல் முதுகில் அந்த நபர் ஊசி போட்டுள்ளார். அப்போது அதை உணர்ந்த அவர் உடனே வண்டியை நிறுத்த அந்த நபர் தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து, பதறிபோய் தனக்கு ஊசி போட்டதை மனைவியிட போன் செய்து தெரியப்படுத்தியுள்ளார். உடனே அதற்கு அவர் அருகில் உள்ள மருத்துவனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார். அதற்குள் அவருக்கு தலை சுற்றல் ஏற்பட அந்த வழியாக செல்வோரிடம் நடந்த விஷயங்களை கூறி உதவி கேட்டார் அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர், 108 ஆம்புலன்சு வரவழைத்தனர். ஆனால், ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜமீல் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரிக்கையில், அவர் ஷேக் ஜமால் சாயபு என்பதும் இவருக்கு ஷேக் இமாம் பீ என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளது தெரிய வந்தது. இவர்கள் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இதனிடையே, மனைவி இமாம் பீ-க்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் ராவ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

இதனால் மனைவி இமாம் அவருடன் தனிமையில் இருந்த போது கணவர் கண்டதால் ஆத்திரமடைந்து மனைவியை கண்டித்துள்ளார். இருவருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூராக இருக்கும் கணவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என ப்ளான் போட்ட மனைவி காதலனுடன் சேர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.3500 கொடுத்து 2 ஊசிகளை வாங்கி வந்தனர்.

இரண்டு விஷ ஊசியை மனைவி ஒன்றும், காதலன் ஒன்றும் வைத்துள்ளனர். மனைவியால் அந்த விஷ ஊசியை கணவருக்கு செலுத்த முடியாத நிலையால், தனது மகள் வீட்டிற்கு சென்று மனைவி தன்னை அழைத்து செல்ல வரும் படி கூறியுள்ளார். அதற்காக வாகனத்தில் வரும்போது தான், காதலனான மோகன் ராவ் நண்பர்கள் வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த் சாம்பசிவ ராவ் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டி காத்திருந்துள்ளனர்.

அப்போது தான் லிப்ட் கேட்டு விஷ ஊசியை போட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இமாம் பீ செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி மோகன் ராவிடம் பேசியது தெரிய வந்தது. இதன் பின்னர், மனைவி காதலன் உட்பட அவரது நண்பர்கள் வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த், சாம்பசிவ ராவ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் சினிமா பாணியில் அதிர்ச்சியையே ஏற்படுத்தியிருக்கிறது.