உங்களின் இறப்பை கணிக்கும் தொழில்நுட்பம் : அறிவதற்கு ஆசையா?

564

தற்போது அனைத்து துறைகளில் நுழையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, மனிதனின் இறப்பைக் கூட சரியாக கணித்து கூறும் என்று கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) தொழில்நுட்பம் தற்போது பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் இது மருத்துவ துறையிலும் வியக்கத்தக்க மாற்றங்களை கொண்டு வரும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

அதன் ஒரு படியாக, ஒரு மனிதனை மருத்துவமனையில் சேர்த்த 24 மணிநேரத்தில், அவர் எவ்வளவு காலம் உயிர் வாழ்வார், எப்போது இறப்பார் என்பதைக் கூட 95 சதவிதம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கணித்துவிடும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்த ஆராய்ச்சியை கூகுளின் Medical Brain குழு மேற்கொண்டது. இந்த ஆராய்ச்சியில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், அவர் உயிர் வாழப்போகும் நாட்களை மருத்துவர்களை விட இந்த தொழில்நுட்பம் அற்புதமாக கணித்துள்ளது.

அதாவது, குறித்த பெண்ணின் முழு ஆரோக்கியத்தை வைத்து 19.9 சதவிதம் அவர் உயிர் வாழ வாய்ப்பில்லை என்று AI கணித்துள்ளது. ஆனால், மருத்துவர்கள் 9.3 சதவிதம் மட்டுமே அவர் உயிர் வாழ வாய்ப்பில்லை என்று கணித்தனர். இதன்மூலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதனின் இறப்பையும் கூறும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும், AI மூலமாக நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாடு, எந்தவித நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது, கிருமிகளை எவ்வாறு கொல்வது, அதற்கு எத்தகைய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் கண்டறியலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்த தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்தி மிகவும் சரியான முறையில் கணிக்க வைக்க உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.