கனவுகன்னி நயன்தாராவின் இளமைக்கான ரகசியம் இதுதான்..!

558

வழக்கமான கதாநாயகிகளுக்கு மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து லேடி சூப்பர்ஸ்டாராக உயர்ந்தவர் நயன்தாரா.இந்த வயதிலும் இவ்வளவு அழகுடன் ஜொலிஜொலிக்க காரணம் என்ன தெரியுமா?

என்றும் இளமையாக இருக்க:எப்போதும் அதிக அளவு தண்ணீர் குடித்து கொண்டே இருப்பது மற்றும் அதிக பழ ஜுஸ்களை அருந்துவதினால் பழங்களில் உள்ள இயற்கையான சத்துக்கள் அவர்களின் உடலை அழகாக என்றும் இளமையுடன் பராமரிக்க உதவுகின்றதாம்.

கூந்தல் அழகிற்கு:முடிக்கு தேவையான அளவு எண்ணெய் இருந்தாலே மிகவும் மென்மையாகவும்,போஷாக்காகவும் இருக்கும் என்பதால் தினமும் அவர் முடிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாராம்.

முகம் பொலிவுடன் இருக்க:அவர் முகத்தை எப்போதும் சுத்தமாகவும், ஈரப்பத்தவுடனே வைத்திருக்க அதிகபட்சம் பிரௌன் டோன் மேக் அப்பையே போடுவராம். அத்துடன் மேலும் அழகை மேம்படுத்த ஆயர்வேத பொருட்களையே பயன்படுத்துவாராம்.

அழகான புன்னகைக்கு:எத்தனை கவலைகள் வந்தாலும் அதை நினைத்து கவலை கொள்ளாமல் என்றும் அழகான சிரிப்புடனே இருப்பாராம். இதுவே இவரின் அழகான புன்னகைக்கு காரணம்.

உடல் ஆரோக்கியம்:நல்ல தூக்கம் என்பது தினமும் 8 மணி நேரம் தவறாமல் தூங்குவதே. இவரும் தினமும் ஆழமான 8 மணி நேர தூக்கத்தையே கடைபிடித்து கொள்வாராம்.