கொழுகொழுவென இருந்த இமான் ஒரு வருடத்தில் 42 கிலோவை எப்படி குறைத்தார் தெரியுமா?

649

தமிழ் இசையமைப்பாளர்களிலேயே அதிக உடல் எடையுடன் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு போட்டியாக இருந்தவர் இமான்.1 வருடத்திற்கு முன்புவரை அதிக உடல் எடையுடன் போல காட்சியளித்த இவர் தற்போது உடல் எடையை அப்படியே குறைத்து அனிருத் போல ஒல்லியாக மாறியுள்ளார். இந்த மாற்றம் நடந்தது எப்படி என இமான் தற்போது ட்விட்டரில் கூறியுள்ளார்.

ஸ்கூல்க்கு போறப்பவே உடம்ப பிட்டாக வைச்சுருக்கனும்னு ஆசையாம். ஆனால் பள்ளிக்கு செல்வது, அதே நேரத்தில் மியூசிக் ரெகார்டிங் செல்வது என பிஸியாக இருந்ததால் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கவில்லை. ஒரே இடத்தில் பல மணி நேரங்கள் அமர்ந்து பணியாற்றியதால் உடல் எடை அதிகரித்துவிட்டது என அவர் கூறியுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து உடற்பயிற்சி, ஒழுங்காக டயட் எடுத்துக்கொண்டதால் தற்போது இப்படி மாறியுள்ளேன். 117 கிலோ இருந்த நான் 42 கிலோ எடை குறைத்து 75 கிலோவாக மாறியுள்ளேன்” என இமான் கூறியுள்ளார்.