இன்றைய ராசிபலன் (02-10-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

2134

இன்றைய ராசிபலன்…

மேஷம்

உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

ரிஷபம்

சந்திராஷ்டமம் இருப்பதால் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

மிதுனம்

தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடி வரும். மனைவி வழியில் நல்லசெய்தி வரும்.தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத் தில் மேலதிகாரி உதவுவார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்

குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். பயணங்களால் பயனடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.

சிம்மம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புதுமை படைக்கும் நாள்.

கன்னி

எதிர்பார்ப்புகள் தடையின்றி முடிவடையும். நட்பு வட்டம் விரிவடையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உயர்வு பெறும் நாள்.

துலாம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.

விருச்சிகம்

சுறுசுறுப்பாக செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள் ஆடை ஆபரணங்கள் பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மனநிறைவு கிட்டும் நாள்.

தனுசு

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

மகரம்

எளிதாக முடிய வேண்டிய விஷயங்களைக்கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சகோதர வகையில்சங்கடங்கள் வரும். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித் துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கும்பம்

வீரியத்தை விட காரியம் பெரிது என்பதை உணர்வீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழையவாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

மீனம்

உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் உங்கள் வேலைகளை சுறுசுறுப்பாக முடித்துக் காட்டுவீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.