லாட்டரியில் வென்ற ரூ.248 கோடி.. குடும்பத்தாரிடம் இருந்த தகவலை மறைத்த நபர் : வெளிவந்த விநோத காரணம்!!

1252

சீனா….

உலகம் முழுவதும் லாட்டரி டிக்கெட் விற்பனை மூலம் சிலர் கோடீஸ்வரனாகி வருகின்றனர். அவர்கள் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் ஒரே நாளில் அவர்கள் பிரபலமானவர்களாகி விடுகின்றனர். ஆனால் அதேபோல லாட்டரி வாங்கும் பலர் தங்கள் பணத்தை இழந்து வருவதும் நடந்து வருகிறது.

கேரளத்தில் லாட்டரி விற்பனை சிறப்பாக நடந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதேபோல உலகளவில் லாட்டரி விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. அந்த வகையில் சீனாவின், குவாங்சி ஜுவாங் (Guangxi Zhuang) எனும் பகுதியைச் சேர்ந்த லீ என்பவருக்கு 219 மில்லியன் யுவான், (இந்திய மதிப்பில் ரூ.248 கோடி) பரிசு விழுந்துள்ளது.

இது குறித்த அறிந்த அவர் இந்த செய்தியை குடும்பத்தாரிடம் இருந்து மறைக்க முடிவு செய்துள்ளார். அதற்காக செய்தித்தாள்களில் புகைப்படம் வந்தால் தன் வீட்டுக்கு இது தெரிந்தவிடும் என்பதால் கார்ட்டூன் உடையில் லாட்டரி பரிசை வாங்கியுள்ளார். வாங்கியவர் அதில் 5 மில்லியன் யுவானை நன்கொடையாக அளித்து வரிபோக மீதம் உள்ள 171 மில்லியன் யுவானை சொந்தமாகியுள்ளார்.

பின்னர் இது குறித்து பேசிய அவர், நான் லாட்டரி வென்றதைப் பற்றி, நான் என் மனைவியிடமோ, குழந்தையிடமோ சொல்லவில்லை. ஏனெனில், எதிர்காலத்தில் குழந்தைகள் படிக்காமலோ, கடுமையாக உழைக்காமலோ போகலாம் என்று கவலைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் இவர் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது. பலரும் அவர் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளனர். அதேபோல பலரும் அவரின் இந்த செயலை பாராட்டியுள்ளனர்.