அசைவம் சாப்பிட்டால் விஷப்பாம்பு தேடி வந்து கொல்லும் : கால காலமாக பயத்தில் சைவத்தை மட்டும் உண்ணும் கிராம மக்கள்!!

1116

ஒடிசா…..

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள தென்கெனல் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராம மக்கள் பழங்கால மூடநம்பிக்கையை இன்று வரையில் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் அசைவ உணவுகளை உண்டால் கொடிய விஷப்பாம்பு கடித்து கொன்றுவிடும் என நம்புகின்றனர்.

அதன்படி சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமத்தில் நடந்த ஒரு சம்பவமே இவர்களின் பயத்திற்கு காரணம். கிராமவாசி கூறுகையில், ஒரு முறை எங்கள் ஊரில் திருவிழாவின் போது சில நபர்கள் ஆற்றில் பிடித்த மீன்களை எடுத்து கொண்டு ஊருக்குள் வந்தார்கள்.

அப்போது வழியிலேயே அவர்களை பாம்புகள் கடித்து கொன்றுவிட்டது. அதிலிருந்து தான் மாமிசம், மீன்கள் போன்ற எந்தவொரு அசைவ உணவுகளையும் நாங்கள் சாப்பிடுவதில்லை.

எந்த ஒரு சுப காரியங்கள் என்றாலும் கூட சைவ உணவுகள் தான் இங்கு சமைக்கப்படும் என கூறியுள்ளார். மாமிசங்களை தெரியாமல் யாராவது சாப்பிட்டால் கூட அவர்களின் கண்பார்வை பறி போய்விடும் மற்றும் பாம்புக்கடியால் இறந்துவிடுவார்கள் என இந்த கிராம மக்கள் உறுதியுடன் நம்புகின்றனர்.