7 வயதில் உறவினர்களால் சீரழிக்கப்பட்ட சிறுமி : பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவருக்கு நேர்ந்த கொடூரம்!!

637

பாகிஸ்தானில் இருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த பெண்மணி ஒருவர் தமது குடும்பத்து ஆண்களாலையே பல முறை பலாத்காரத்திற்கு உள்ளான துயரத்தை முதன் முறையாக அம்பலப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவின் பிரிஸ்டல் நகரில் குடியிருந்து வரும் 43 வயதான சபா கைசர் தாம் 7 வயதில் இருந்தே அனுபவித்துவரும் துயரம் குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் வைத்து தமது 2 வயதில் தந்தை இறந்த நிலையில் தீவிர மத நம்பிக்கை கொண்ட தாயாருடன் சபா பிரிஸ்டல் நகருக்கு புலம்பெயர்ந்துள்ளார்.

சிறுமி சபா 7 வயதில் இருந்தே அவரது உறவினர் ஆண்களால் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகி வந்துள்ளார். தமக்கு ஏற்பட்ட சம்பவங்களை தாயாரிடம் முறையிட்ட சபாவுக்கு, தாயாரின் அதட்டல் மட்டுமே தீர்வாக கிடைத்துள்ளது.

சபாவின் 9 வயதில் இரவு தூக்கத்தில் இருந்த அவரை அள்ளிச்சென்ற முதியவரான உறவினர் முதன் முறையாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

தொடர்ந்து 8 ஆண்டுகள் சபா இந்த துன்பங்களை அனுபவித்து வந்துள்ளார். சிறுமி சபாவை 7 வயதில் இருந்தே துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய அந்த உறவினர், குடும்ப வீட்டில் இருந்து கொண்டே சிறார் ஆபாச கும்பலுடன் தொடர்பு வைத்திருந்துள்ளார்.

ஒவ்வொருமுறை தமக்கு நேரும் துயரங்களை தாயாரிடம் முறையிடும்போதும் குடும்பத்தாரால் அது மூடிமறைக்கப்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் உளவியல் ஆலோசனை பெறும்பொருட்டு குடும்பத்தார் நபர் ஒருவரிடம் அனுப்பியுள்ளனர். ஆனால் அவரும் சபாவை வன்புணர்வுக்கு இரையாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தமது 43-வது வயதில் 2 பிள்ளைகளுக்கு தாயாராக இருக்கும் சபா முதன் முறையாக தமக்கு நேர்ந்த துயரங்களை பொதுமக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தியுள்ளார்.

மட்டுமின்றி பிரித்தானிய ஆசிய குடும்பங்களில் இதுபோன்ற துயரங்கள் அன்றாடம் நடந்தேறுவதாகவும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

குடும்பத்தில் உள்ள வயது முதிர்ந்த 4 ஆண்களால் சபா பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். இதில் கொடுமை என்னவெனில் அவர்களின் மனைவிகளே பார்வையாளர்களாக இருந்தது தான் என சபா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதியப்பட்டு பின்னாளில் விசாரணை நடத்தப்பட்டது என்றாலும், போதிய ஆதாரம் இல்லை என்பதால் வழக்கு தள்ளுபடியானது என சபா தெரிவித்துள்ளார்.

தற்போது தமது குடும்பத்தாருடன் எந்த உறவும் இல்லை எனக் கூறும் சபா கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் நிம்மதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி பிரித்தானியாவில் சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.