ஹாலிவுட் நடிகைகளின் செல்போன் ஹேக் : அந்தரங்க புகைபடங்களை வெளியிட்டவருக்கு நேர்ந்த கதி!!

310

ஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு 8 ஆண்டுகால சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹாலிவுட் திரையுலகில் பிரபல நடிகைகளாக வலம்வந்த Jennifer Lawrence, Kirsten Dunst, Kate Upton உள்ளிட்ட பல நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் கடந்த 2014-ம் ஆண்டு ஹேக்கர்களால் திருடப்பட்டு இணையத்தில் கசியவிடப்பட்டன.

சினிமா திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, அமெரிக்காவின் North Branford பகுதியை சேர்ந்த George Garofan என்ற இளைஞருடன் சேர்த்து 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஆப்பிள் கணக்கு பாதுகாப்பு துறையிலிருந்து பேசுவதை போல் ஈமெயில் அனுப்பி கடவுச்சொல்லை நடிகைகளிடம் இருந்து பெற்றுள்ளனர்.

இதுபோன்று நடிகைகளிடம் இருந்து பெற்ற கடவுச்சொல்லை கொண்டு, ஹாலிவுட் பிரபலங்களின் 200 iCloud கணக்குகளை ஹேக் செய்துள்ளது தெரியவந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடந்துள்ளது. அப்பொழுது விசாரணையை முழுவதுமாக கேட்ட நீதிபதி, குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதில் 3 ஆண்டுகளுக்கு குற்றவாளி சமூக சேவை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.