வெள்ளிக்கிழமை உங்க பணப்பெட்டியில் இந்த பொருட்களை வைங்க : அதிசயம் நடக்கும்!!

1700

சிலர் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் அவர்கள் கையில் பணம் நிற்பதே இல்லை. மேலும் இத்தகைய பண பிரச்சனை வராமல் இருக்கவும் மற்றும் பண வரவு அதிகமாகவும் உதவும் சில வழிகள் என்ன என்று பார்ப்போம்.

பணப்பெட்டி : பணப்பெட்டியில் மல்லிகைபூ, ஏலக்காய் ,பச்சைகற்பூரம், சந்தனம், வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமைகளில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும்.

லட்சுமி கடாட்சம் : பால்,தேன், தாமரை, தானியக்கதிர்,நாணயங்கள் இவை லட்சுமியின் அடையாளங்கள். குறிப்பாக வெள்ளிக்கிண்ணத்தில் நாணயங்கள் வைத்திருந்தால் செல்வம் செழிக்கும்.

ஐந்து முக விளக்கு : வெள்ளிக்கிழமை மாலையில் தாமரை வடிவிலான லட்சுமி கோலம் போட்டு அதன் மீது ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வழிபட்டால் அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

வண்ணம் : பணம் கைமாறும் நேரங்களில், அடர் நிறமாக இல்லாமல் லைட் கலர்ஸ் ஆடைகளை அணிந்து செல்லுங்கள் அல்லது அந்த நிறத்தில் ஒரு கைகுட்டையாவது கைகளில் வைத்திருங்கள்.

தூக்கம் : எப்போதும் மேற்கு திசையில் தலை வைத்து படுப்பதையே வழக்கமாக கொண்டிருங்கள். வடக்கு நோக்கி தலை வைத்து படுப்பதை தவிர்த்திடுங்கள். இத்திசையில் படுத்தால் அதிக சோம்பல் குடிகொள்ளும்.

பூஜையறை : நமது வீட்டு பூஜை அறையில் இரண்டு கடவுள் சிலைகளை எதிரெதிரே வைக்கக் கூடாது. ஏனெனில் இதனால் நமது வீட்டில் செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைந்துவிடும்.

கடிகாரம் : கடிகாரத்தை கதவுகளுக்கு மேலே, வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றில் மாட்டக் கூடாது. கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.

குபேரன் : செல்வத்தின் அதிபதியான குபேரன் ஊறுகாய் பிரியர். அதனால் வீட்டில் பல வகையான ஊறுகாய்கள் இருந்தால் அங்கே குபேரன் வாசம் செய்வார் என்பது நம்பிக்கை.

குப்பை : மூன்று நாட்களுக்கு மேல் குப்பையை சேர்த்து வைக்க கூடாது. ஒரே ஆடையை அடிக்கடி அணிந்தாலும் செல்வ வளம் குறைந்திடும். உடுத்திய துணியை வீட்டின் கதவுகளில் தொங்கவிடக்கூடாது.

கண் திருஷ்டி : வாழை பூவை வீடுகளின் முன்பு, அல்லது வியாபார இடங்களின் முன்பு கட்டி வைத்து வாரம் ஒரு முறை மாற்றி வர கண் திருஷ்டி அகன்று வியாபாரம் விருத்தி அடையும். இது அனைவரின் பார்வை படும்படி இருக்க வேண்டும்.

கண்ணாடி : வீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்து செவ்வக வடிவில் இருக்க வேண்டும். அதேபோல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது.

செடிகள் : வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வ வரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.

விளக்கு : வீட்டில் இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது.