ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை : கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் செய்த மோசமான செயல்!!

860

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, பெண்ணொருவர் தனது கள்ளக்காதலனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று நகை பறித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் அருகே உள்ள மாவேலிக்கரை மற்றும் சுற்றுப்பகுதியில், சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றது.

இது தொடர்பாக பொலிசாருக்கு புகார்கள் குவிந்தன. பாதிக்கப்பட்டவர்களில் 50க்கும் மேற்பட்டோர் புகார் தெரிவித்ததால், பொலிசார் தீவிர வேட்டையில் இறங்கினர்.

இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வந்த ஒரு ஆணும், பெண்ணும் தங்களிடம் முகவரி கேட்பது போல் நடித்து, தங்களை ஏமாற்றி நகைகளை பறித்து சென்றதாக புகார் கூறியவர்கள் பொலிசாரிடம் கூறியிருந்தனர்.

அதன் அடிப்படையில் இந்த சம்பவங்களை ஒரே கும்பல் தான் செய்திருக்கக் கூடும் என பொலிசார் முடிவு செய்தினர். அதன் பின்னர், மாவேலிக்கரை பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராவில், நகை திருட்டு காட்சி ஒன்று பதிவாகி இருந்தது.

அதில் தெரிந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து பொலிசார் விசாரணை நடத்தியதில், அது போலி பதிவு எண் என்பது தெரிய வந்தது. இதனால் குற்றவாளிகளை பிடிப்பதில் பொலிசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், மாவேலிக்கரை கல்லூரி சாலையில் ஒரு பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர்களை, பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர்.

பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த விஜூ(33) மற்றும் மாவேலிக்கரையைச் சேர்ந்த சுனிதா(36) என்பதும், அவர்கள் கள்ளக்காதலர்கள் என்பதும் தெரிய வந்தது.

மூன்று குழந்தைகளுக்கு தாயான சுனிதா, தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், வேலைக்கு சென்ற இடத்தில் விஜூயுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் அடிக்கடி தங்களின் வாகனத்தின் பதிவு எண்களையும், நிறத்தையும் மாற்றிவிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததால் பொலிசாரிடம் பிடிபடாமல் இருந்துள்ளனர்.