பிரபல தமிழ் நடிகையை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த நபருக்கு நேர்ந்த பரிதாபம் : உண்மையில் நடந்தது என்ன?

1078

நிலானி

தமிழகத்தில் பிரபல சின்னத்திரை நடிகையான நிலானியை திருமணம் செய்யாமல் லிவ் இன் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த உதவி இயக்குனர் லலித்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்டவர் சினிமா உதவி இயக்குனர் காந்தி லலித்குமார். இவர் உதயநிதிஸ்டாலினின் ரசிகர் மன்ற நிர்வாகியாகவும், அவரது படத்தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பிலும் இருந்துள்ளார்.

இந்நிலையில் நடிகையான நிலானி சமீபத்தில் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி தொந்தரவு செய்வதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனால் விரக்தியடைந்த லலித்குமார் கடந்த ஞாயிற்றுக் கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பொலிசார் அவரின் போன் மற்றும் ஆண்நண்பர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லலித்குமார் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ரெட்ஜெயன்ட் அலுவலகத்தில் பணியாற்றிய போது, அங்கு நடிகை நிலானி நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டுச் சென்றுள்ளார்.

அப்போது நிலானிக்கும், லலித்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலானியின் அழகில் மயங்கிய லலித்குமார் அவரை காதலித்துள்ளார்.

அப்போது லலித்குமாரின் கையில் காசு அதிகம் புழங்கியதால், நிலானி அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். நிலானியின் இரு குழந்தைகளையும் பள்ளியில் கொண்டு விடும் அளவுக்கு குடும்பத்தில் ஒருவரான லலித் இருந்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அதாவது லிவ் இன் டுகெதர் முறையில் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர். அதற்கான புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.

இப்படி இருவரும் மகிழ்ச்சியாக இருந்த போது, லலித்குமாருக்கு வேலை பறிபோனதால், அவரின் பணவரவு குறைந்துள்ளது. இதனால் இருவருக்கும் விரிசல் ஏற்பட்டுள்ளது. பணம் இல்லாததால், நிலானிக்கும், லலித்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.

இந்நிலையில் தான் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு நிலானி மதுரவாயில் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அப்போது பொலிசார் இருவரை அழைத்து சமரசமாக பேசி அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் பாரதிராஜாவின் அமைப்பில் சேர்ந்த நிலானியின் செயல்பட்டால் மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் நிலானிக்கு புதிய ஆண் நண்பரின் பழக்கமும் கிடைத்துள்ளது. இதை அறிந்த லலித், நிலானியிடம் கேட்ட போது மீண்டும் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நிலானி மயிலாப்பூரில் உள்ள காவல் நிலையத்தில் லலித் தன்னை தொந்தரவு செய்வதாக புகார் அளித்துள்ளார்.

சம்பாதித்த பணத்தை எல்லாம் நிலானியின் அழகில் மயங்கி கொட்டித்தீர்த்த லலித்குமார் தன் மீது அவர் புகார் கொடுத்துவிட்டதால் செய்வதறியாமல் தவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் நிலானியை மறக்க முடியாமல், மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் பொலிசார் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.