55 அடி ஆழமுள்ள கிணற்றில் மிதந்த 3 பெண்களின் சடலங்கள்…பின்னணி காரணம் என்ன?

868

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றபோது, கிணற்றில் தவறி விழுந்த 8 பேரில் 3 பெண்கள் சடலமாக மிதந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூர்யபிள்ளையார் குப்பம் என்ற ஊரில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மின்சாரம் தடை பட்டுள்ளது. இதனால் கிராமத்தில் இருக்கும் பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக 7 பெண்கள் குடங்களுடன் சென்றுள்ளனர். அங்கு தண்ணீர் எடுத்திக்கொண்டிருக்கும்போதே திடீரென சிமெண்ட் பலகை சரிந்துள்ளது.

இதில் அங்கிருந்த பெண்கள் 7 பேருமே கிணற்றுக்குள் விழுந்தனர். இதனை பார்த்த நாகப்பன் என்ற நபர் காப்பாற்ற சென்றபொழுது, அவரும் கிணற்றுக்கு தவறி விழுந்தார்.

கிணற்றுக்குள் இருந்து அலறல் சத்தம் வருவதை அறிந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் மழையின் காரணாமாக பகுதி முழுவதும் சேதமடைந்திருந்ததால், 400 மீ தூரத்திலே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதற்கிடையில் நாகப்பன், மல்லிகா, சிவகாமி, அம்சா, நீலாவதி ஆகிய 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஆனால் கிணற்று சுற்றுப்பகுதி ஈரமாக இருந்த காரணத்தாலும், சிமென்ட் சிலாப் உடையும் தருவாயில் இருந்ததாலும், தீயணைப்பு துறையினரால் மற்ற மூவரையும் மீட்க முடியவில்லை. இதில் சடலங்களாக கிணற்றில் மிதந்த 3 பேரின் உடல்களை இரவு முழுவதும் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு துறையினர் மீட்டெடுத்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணநிதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.