இளம் வயது மகளை கன்னித்தன்மை சோதனைக்கு நிர்பந்தித்த  பெற்றோர் : அதிர்ச்சி சம்பவம்!!

801

கன்னித்தன்மை

தெற்கு லண்டனில் குடியிருக்கும் குடும்பம் ஒன்று தங்களது இளம் வயது மகளுக்கு ரகசிய காதலன் இருப்பதாக கூறி அவரை கன்னித்தன்மை சோதனைக்கு நிர்பந்தித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தெற்கு லண்டனில் குடியிருக்கும் இரானிய குடும்பம் ஒன்று காதல் விவகாரம் தொடர்பில் தங்களது 18 வயது மகள் சோபியாவுக்கும் அவரது காதலனுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மட்டுமின்றி தங்களது மகளை வலுக்கட்டாயமாக கன்னித்தன்மை சோதனைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.

தங்களது மகள் ஒரு இஸ்லாமியரை காதலிப்பது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட சோபியாவை அவரது ஒப்புதலின்றி கன்னித்தன்மை சோதனைக்கு உட்படுத்த முடியாது என மருத்துவர் லீவிஸ் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதை ஒப்பிக்கொள்ள மறுத்த சோபியாவின் தாயார், மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த விவகாரம் காவல்துறையிடம் சென்றுள்ளது. பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், தாம் ஒரு கண்டிப்பான இஸ்லாமிய குடும்பத்தை சார்ந்தவள் என தெரிவித்துள்ளார்.

ஆனால் அதை மறுத்துள்ள சோபியாவின் தந்தை, அது உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளார்.

சோபியாவின் பெற்றோர் தங்களது மகள் இளைஞர் ஒருவரை ரகசியமாக அழைத்து வந்து அவரது அறையில் தனியாக சந்தித்ததை கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் ஒருநாள் அந்த இளைஞரை நேரில் சந்தித்து மிரட்டிய சோபியாவின் தந்தை, அவர்கள் இஸ்லாமியர்கள் என்றும், சமூகத்திற்கு அவர்கள் ஆபத்தானவர்கள் எனவும் எச்சரித்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பான விசாரணை கிங்ஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.