ஆண்களே உஷார் : இனிமேல் மறந்தும் இந்த 10 விஷயங்களை செய்யவே செய்யாதீங்க!!

1235

ஆண்களே உஷார்

இன்றைய வேலை மற்றும் வாழ்வியல் மாற்றத்தின் காரணமாக ஆண்களுக்கு விந்தணு திறன் மற்றும் உற்பத்தி குறைபாடு ஏற்படுகிறது. அத்தகைய ஆண்களுக்கு ஏற்படும் விந்தணு திறன் மற்றும் உற்பத்தி குறைபாட்டிற்கு முக்கிய காரணங்கள் என்ன என்று பார்க்கலாம்.

சுடுநீர் குளியல் : பெரும்பாலான ஆண்கள் உடல் வலி குறைக்க சூடான நீரில் குளிப்பார்கள். மேலும் இவ்வாறு செய்யும் பொழுது விந்தணுவின் தரம் குறைவதோடு உற்பத்தியும் தடைபடும்.

இறுக்கமான உடை அணிதல் : அணியும் உள்ளாடை மிகவும் இறுக்கமானதாக இருப்பதால் இவை விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். எனவே எப்போது தளர்வாக இருக்கும் உள்ளாடையையே அணிய வேண்டும்.

நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்துவது : ஆண்கள் நீண்ட நேரம் மொபைல் போனை பயன்படுத்தினால் விந்தணுவின் உற்பத்தி குறையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மன அழுத்தம் : மன அழுத்தம் ஆண்களின் உடலில் விந்தணு உற்பத்தி குறைந்து சில சமயங்களில் இவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும். எனவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும்.

போதிய உடலுறவு இல்லாமை : உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் பல உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். எனவே அவ்வப்போது உடலுறவு கொள்வதன் மூலம், மன அழுத்தம் குறைந்து, விந்தணுவின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

குடி பழக்கம் : ஆல்கஹால் அதிகம் பருகினால், அவை டெஸ்டோஸ்டிரோனின் அளவை குறைக்கும். இதனால் விந்தணுவின் உற்பத்தியும் குறையும். ஆகவே ஆல்கஹாலை அதிகம் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

புகைப்பிடித்தல் : சிகரெட்டில் உள்ள புகையிலையானது, விந்தணுவின் உற்பத்தியை குறைப்பதோடு, மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும்.

சோயா பொருட்கள் : ஆண்கள் சோயா பொருட்களை அதிகம் உட்கொள்வதால் அதில் உள்ள ஐசோஃப்ளேவோன்ஸ் விந்தணுவின் எண்ணிக்கை தரம் மற்றும் உற்பத்தியை பாதிக்கும்.

டிவி பார்த்தல் : தினமும் டிவி பார்க்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறையும் வாய்ப்பு உள்ளது. எனவே தினமும் டிவியை அதிகம் பார்க்காமல் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.

லேப்டாப் : பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவு லேப்டாப்பை பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களுக்கு விந்தணுவின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே லேப்டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.