என் வாழ்க்கையிலே அவன் வந்து விளையாடிட்டான் : கண்ணீரோடு நடிகர் கஞ்சா கருப்பு!!

779

கஞ்சா கருப்பு

பிரபல திரைப்பட நடிகரான கஞ்சா கருப்பு இனி நான் வாழ்க்கையில் படமே தயாரிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். பருத்திவீரன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர் நடிகர் கஞ்சா கருப்பு, அதன் பின் காமெடி ரோலில் கலக்கிய இவர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

ஆனால் சமீபகாலமாக இவர் நடிப்பில் அந்தளவிற்கு பெரிய படங்கள் எதுவும் வரவில்லை, அதுமட்டுமின்றி கஞ்சா கருப்பு கடனில் தத்தளிப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் அவரிடம் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், அது எல்லாம் உண்மை தான், இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.

வேல்முருகன் போர்வெல் என்ற படத்தால் மிகவும் கஷ்டப்பட்டேன், பாலா மற்றும் அமீர் அப்பவே சொன்னாக, சினிமா என்பது பொக்கிஷம், அதை பத்திரமாக பாத்து கொள்ள வேண்டும். தயாரிப்பு என்பது அவ்வளவு எளிதல்ல, ஆழம் தெரியாம காலை விடாதேன்னு சொன்னாங்க, அதை கேட்காம கோபி என்ற ஒருத்தன் டைரக்டர்ங்கிற பேர்ல எமனா வந்து என் வாழ்க்கையில விளையாடிட்டான்.

இப்பவும் பெரிய டைரக்டர்கள் பேரச் சொல்லிக்கிட்டு, அவர்களிடம் அசிஸ்டெண்டா இருக்கேன்னு அள்ளிவிட்டுக்கிட்டிருக்கான். கோபி மாதிரி குடி கெடுப்பவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த ஜென்மத்தில் படமே எடுக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.