ஒரே மாணவியை காதலித்த 2 மாணவர்கள் : ஒருவருக்கொருவர் தீ வைத்துக் கொண்டதில் ஒருவர் பலி!!

533

ஒரே மாணவியை காதலித்த 2 மாணவர்கள்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஒரே மாணவியை காதலித்த 2 பள்ளி மாணவர்கள், ஒருவருக்கொருவர் தீ வைத்துக்கொண்டதில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஜக்டியா நகரில் உள்ள பள்ளி ஒன்றில், 10ஆம் வகுப்பு படித்து வந்த ரவி தேஜா மற்றும் மஹேந்தர் என்ற இரண்டு மாணவர்கள் ஒரே மாணவியை காதலித்து வந்துள்ளனர். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் இருவரும் மது அருந்தியுள்ளனர்.

அதன் பின்னர் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது மாணவர்கள் ஒருவருக்கொருவர் தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

உடலில் தீப்பற்றியதில் மஹேந்தர் என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். படுகாயமடைந்த மற்றொரு மாணவரான ரவி தேஜா, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், மேலும் ஒரு மாணவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திலிருந்து பீர் போத்தல்கள் மற்றும் கைப்பேசிகளை கைப்பற்றிய பொலிசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்களும் வகுப்புத் தோழர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.