போட்டோவை கிழித்து தூக்கி எறிந்த சிவகார்த்திகேயன்! நடந்தது என்ன??

275

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முக்கிய நடிகராகிவிட்டார். இவ்வருடம் அவரின் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகவுள்ளது.

தற்போது சினிமா ஸ்டிரைக் நடைபெற்று வருவதால் படங்கள் ஏதும் வெளிவராமல் இருக்கிறது. படப்பிடிப்புகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது வருத்தமான விசயம் தான்.

சிவா அண்மையில் ஒரு பத்திரிக்கையின் கலந்துரையாடலில் கலந்துகொண்டார். அவர் பலரும் கேள்வி கேட்டனர். அவரும் தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது ஆங்கில நாடகத்திற்காக பெண் வேடமிட்டாராம். மிகவும் கூச்சமாக இருந்ததால் கண்ணாடியில் முகத்தை பார்க்கவில்லையாம்.

ஆனால் தனக்கு பிடிச்ச டீச்சர் சொன்னதால் தான் நடித்தாராம். எல்லோரும் அதை ரசித்தார்களாம். பின் அந்த புகைப்படத்தை சில நாட்கள் கழித்து பிடிக்காமல் கிழித்து எறிந்துவிட்டாராம்.

அதோடு மீண்டும் பெண்ணாக நடிக்க சொன்னதை முற்றிலும் தவிர்த்து விட்டாராம். பிறகு ரெமோ படத்தில் தான் பெண் வேடத்தில் நடித்தாராம்.