என் மகன் இப்படி தான் வர வேண்டும்: ஷாருக்கானின் விருப்பம் என்ன தெரியுமா?

771

தனது இளைய மகன் இந்தியாவுக்காக ஹாக்கி விளையாடுவதே தனது விருப்பம் என ஹிந்தி நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியை காண கொல்கத்தா அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கான், அவரது மகள் சுஹானா, மகன் ஆப்ராம் ஆகியோர் வந்திருந்தனர்.

போட்டி முடிந்த பின்னர், நடிகர் ஷாருக்கான் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், ‘என்னுடைய இளைய மகன் 5 வயதான ஆப்ராமை, நான் ஹாக்கி விளையாட்டு வீரராக உருவாக்க விரும்புகிறேன்.

அவர் இந்த நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இன்னும் ஆப்ராம் கிரிக்கெட் விளையாடக் கூட முயற்சிக்கவில்லை. தற்போது கால்பந்து மட்டுமே விளையாடி வருகிறார்.

அவர் வளர்ந்து வரும்போது, ஹாக்கி பயிற்சி அளித்து நாட்டுக்கான அணியில் பங்கேற்று விளையாட வேண்டும் என கூறினார்.

மேலும், மேற்கு வங்க மக்களின் கனவு, கொல்கத்தா அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக், அவரின் அணியை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான் எனவும்,

அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் எந்தவிதமான சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான், கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான ‘Chak De India’ எனும் திரைப்படத்தில், மகளிர் அணிக்கு ஹாக்கி பயிற்சியாளராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.