பிக்பாஸ் பரிசு பணம் 50 லட்சம் ரூபாய் பற்றி பரவிய செய்தி : நடிகை ரித்விகா அதிரடி விளக்கம்!!

178

பிக்பாஸ்

பிக்பாஸ் 2வது சீசன் டைட்டில் வென்றவர் நடிகை ரித்விகா. அவருக்கு தற்போது பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அது மட்டுமின்றி அவர் பிக்பாஸ் போட்டியில் வென்ற 50 லட்சம் ரூபாயை சில விஷயங்களுக்கு நன்கொடையாக கொடுக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

அதற்கு விளக்கம் அளிக்கும் விதத்தில் ரித்விகா ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். “நிறைய வதந்திகள் என் புதிய படம் மற்றும் பரிசு பணம் நன்கொடை அளிப்பது பற்றி சுற்றி வருகிறது. அது பற்றி நான் என் ட்விட்டர் கணக்கில் பதிவிடுவேன்” என அவர் கூறியுள்ளார். இதன் மூலம் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.