நிறைய பெண்கள் வருவாங்க : கணவர் குறித்து பொதுவெளியில் கண்ணீர்விட்ட இரண்டாவது மனைவி!!

387

நிறைய பெண்கள் வருவாங்க

காதல் திருமணம் செய்து ரூ.10 லட்சம், 65 சவரன் நகை அபகரித்ததாக சென்னை இன்ஸ்பெக்டர் மீது 2வது மனைவி கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.

சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஸ்ரீஜா (42) என்பவர் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ஆய்வாளர் தாம்சன் என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் என்னை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆரம்பத்தில் அன்பாக நடந்து கொண்ட தாம்சன் காலப்போக்கில் என்னை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். அவ்வப்போது பல்வேறு பிரச்னைகளை கூறி சிறுக, சிறுக என்னிடம் ரூ10 லட்சம், 65 சவரன் தங்க நகையை வாங்கினார்.

அதன்பிறகு, கடந்த 2013ம் ஆண்டு என்னையும், 10 வயது மகளையும் அடித்து துரத்தி விட்டு பல பெண்களுடன் சுற்றி திரிந்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக தாம்சன் காசோலை மோசடி செய்ததாக செய்தி வந்ததை கண்டேன். இதுதொடர்பாக அவர் சிறை சென்று விட்டால் அவர் என்னிடம் வாங்கிய ரூ10 லட்சம், 65 சவரன் நகை கிடைக்காமல் போய் விடும். எனது மகள் நிலை கேள்விக்குறியாகி விடும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீஜா கூறுகையில், 2013ம் ஆண்டு முதல் தாம்சன் உடல் ரீதியாக அதிகமாக தொந்தரவு செய்தார். மேலும் இரவு நேரங்களில் தெரியாத பெண்கள் எல்லாம் வீட்டிற்கு தேடிவந்தனர்.

நேற்று கூட பேஸ்புக்கில் ஏதோ பதிவு செய்தேன் என்று கொலை மிரட்டல் கொடுக்கிறார். என்னையும், என்மகளையும் அவர் எது வேண்டுமானாலும் பண்ணலாம் என கண்ணீருடன் கூறியுள்ளார்.