பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம் : அதிர்ச்சியில் சக நடிகர்கள்!!

214

பிரபல நடிகர் ராம்மோகன் தனது 68-வது வயதில் காலமானார். மலையாள திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் ராம்மோகன்.

சிவகாமி, கதையிலே ராஜகுமாரி போன்ற தொடர்களில் இவரின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல பெயர் கிடைத்தது. ராம்மோகனுக்கு சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். அவரின் இறப்பு குறித்து சக நடிகர் கிஷோர் சத்யா கூறுகையில், ராம்மோகன் என் நீண்ட கால நண்பர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட அவருடன் இணைந்து வேலை செய்தேன்.

அவரின் இறப்பு செய்தி அதிர்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார். இது போல பல நடிகர், நடிகைகள் ராம்மோகன் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.