வைரமுத்துவை தொடர்ந்து ராதாரவி மீது பாலியல் புகார்!!

242

ராதாரவி

சினிமா துறை வட்டாரத்தில் தினம் தினம் பாலியல் புகார் வந்தவண்ணம் உள்ளது. இதில் நேற்று கவிஞர் வைரமுத்துவின் மீது பெண் ஒருவர் பாலியம் குற்றச்சாட்டு கூறினார். இதனைதொடர்ந்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும் ஒரு பெண் பத்திரிக்கையாளர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை குறித்தும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறித்தும் சின்மயி தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பேசி வருகிறார். தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியவர்கள் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து பேசி வருகிறார். இதில் அவர் சிறு வயதில் தனது உறவினர்களால் அனுபவித்த பாலியல் தொந்தரவுகள் குறித்தும் வெளிப்படையாக பேசி வருகிறார்.

இதனால் நம்பிக்கைப் பெற்ற பெண்கள் தாங்கள் அனுபவித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து அவரிடம் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அவர்களின் அனுமதியோடு அவற்றையும் தனது டிவிட்டரில் சின்மயி பகிர்ந்து வருகிறார்.

இந்த வரிசையில் நேற்று மாலை அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு பெண் பத்திரிக்கையாளர் கவிஞர் வைரமுத்துத் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்ததை தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த விஷயம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.

இதனைதொடர்ந்து ராதாரவி மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதில் அவரை நான் வேலை விடயமாக பார்க்க சென்ற போது அவர் என்னை வீட்டிற்கு அழைத்தார். பின் என்னை அணைத்து முத்தமிட்டார்.

பின் உன் நண்பர்களோடு வரவேண்டாம், தனியாக வா என்றார். இப்போது வரை என் வேலை முடியவில்லை.அவருக்கு நிறைய அரசியல் செல்வாக்கு மற்றும் சினிமா துறையில் செல்வாக்கு உள்ளது. அதனால் தான் என் கருத்துகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டேன் என்கிறார்.