நடிகர் சிம்புவின் சொத்துக்களை ஜப்தி செய்ய உச்சநீதிமன்றம் ஆணை!!

166

நடிகர் சிம்பு

திரைப்பட முன்பணத்தை திருப்பி தராவிட்டால் நடிகர் சிம்புவின் சொத்துக்களை ஜப்தி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசன் படத்திற்காக முன்பணமாக பெற்ற ரூ.50 லட்சத்தை வட்டியுடன் அளிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்ததையடுத்து, நடிகர் சிம்பு, வட்டியுடன் சேர்த்து ரூ.85 லட்சத்திற்கான உத்திரவாதத்தை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் திரைப்பட முன்பணத்தை திருப்பித்தர உத்திரவாதம் அளிக்காவிட்டால் நடிகர் சிம்புவின் உடைமைகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.