பீட்சாவில் எச்சில் துப்பிய நபருக்கு 18 ஆண்டுகள் சிறை : அவர் சொன்ன காரணத்தை கேட்டா அப்படியே ஷாக் ஆகிடுவிங்க!!

356

பீட்சா

துருக்கியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் புராக், பிரபல இணைய வணிக நிறுவனத்தில் உணவுப் பொருள்களை டெலிவரி செய்யும் பீட்சாவில் எச்சில் துப்பிய வீடியோ மிகவும் பரவலாக பரப்பப்பட்டது.

எச்சில் துப்பிய காட்சியைப் பார்த்த நபர், வாடிக்கையாளருக்குக் கால் செய்து, `உன் வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும் பீட்சாவில் டெலிவரி பாய் எச்சில் உமிழ்ந்துவிட்டார். எனவே, அதைச் சாப்பிட வேண்டாம்’ என்று தொலைபேசியில் தகவல் கொடுத்தார். அதையடுத்து, அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளைப் பார்த்த வாடிக்கையாளர் ஆத்திரமடைந்து, புராக் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த வழக்கு, இந்த மாதம் நீதிமன்றத்துக்கு வந்தது. நீதிபதி புராக்கிடம், `ஒருவரின் உணவில் எச்சில் உமிழ்ந்து தருவது மனிதத் தன்மையற்ற செயல். ஏன் இப்படிச் செய்தாய்?’ என்று கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த புராக், `என் நண்பர் கடந்த வாரம் அதே வாடிக்கையாளர் வீட்டுக்கு பீட்சா டெலிவரி செய்தார். அதைப் பெற்றுக்கொண்ட அந்த வாடிக்கையாளர், பீட்சா சூடாக இல்லை என்று என் நண்பரைத் தரக் குறைவாகப் பேசி சண்டை போட்டார்.

என் நண்பரின் வேலை பறிபோகும் அளவுக்குப் புகாரும் கொடுத்தார். எனவே, இம்முறையும் பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக, பீட்சா சூடாக இருக்கிறதா என்பதைச் சோதிக்கவே திறந்து பார்த்தேன். ஆனால், பீட்சாவில் நான் எச்சில் துப்பவில்லை; பீட்சாவுடன் செல்ஃபி மட்டுமே எடுத்தேன்’ என்றார்.

ஆனால் புராக்கின் வாக்குமூலத்தில் திருப்தியடையாத நீதிபதி, அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

உணவை நாசப்படுத்தி வாடிக்கையாளரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக, அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.