வைரமுத்துவை திருமணத்துக்கு எப்படி அழைக்காமல் இருக்க முடியும்? சின்மயி விளக்கம்!!

1528

பாடகி சின்மயி

பாடகி சின்மயி ட்விட்டரில் கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகிறார். மேலும், சுவிட்சர்லாந்து ஹொட்டலில் தன்னை தவறாக அழைத்ததாகவும் கூறியுள்ளார்.

இது நடந்து 13 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என அவரே கூறியுள்ள நிலையில், அதன் பின் நடந்த திருமணத்தின் போது ஏன் வைரமுத்துவின் காலில் விழுந்தீர்கள் என சிலர் வீடியோ வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதில் அளித்துள்ள சின்மயி, “அப்போது என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த விஷயம் தெரியாது. வைரமுத்துவின் மகன்கள் இருவரும் எங்களுக்கு நெருக்கமானவர்கள். அவர்களை அழைக்கும்போது அவர்களின் அப்பா வைரமுத்துவை எப்படி அழைக்காமல் விட முடியும்” என கூறியுள்ளார்.

தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள் : வைரமுத்துவின் பதில் இதோ..

பிரபல பாடகியான சின்மயி வெளியிட்டுள்ள அடுக்கடுக்கான பாலியல் புகார் குறித்து, கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தியா மேனன் என்ற பெண் பத்திரிக்கையாளர், கவிஞர் வைரமுத்து ஒரு பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
அவருடைய கருத்தை ஆதரித்து பிரபல பாடகியான சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வைரமுத்து தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.

மேலும் வைரமுத்துவின் லீலைகள் பற்றி அவருடைய அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் தெரியும். எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தொடர்ந்து அவருடைய செயல்களை அம்பலப்படுத்துவேன் என கூறியிருந்தார்.

அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.

அவருடைய இந்த பதிவு சினிமா வட்டாரம் துவங்கி இணையத்தளம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

“அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்” என பதிவிட்டுள்ளார்.