மீண்டும் ஒரு இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த நிலை : வைரமுத்துவால் அல்ல : சின்மயி அடுத்தடுத்து அதிரடி!!

180

இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த நிலை

பிரபல டான்ஸ் மாஸ்டரான கல்யாண் சுந்தரம் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக, இலங்கை பெண் ஒருவர் வெளியிட்டுள்ளளதாக சின்மாயி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வைரமுத்து பற்றி சின்மாயி வெளியிட்ட தகவல்கள் தான் தற்போது அனைத்து ஊடகங்களிலும் பரபரப்ப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு தான் இலங்கை பெண் ஒருவர் வைரமுத்துவைப் பற்றி கூறியிருந்ததாக கூறி அந்த தகவல்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சின்மயி வெளியிட்டிருந்தார்.

அந்த தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகுவதற்குள் அடுத்து ஒரு இலங்கைப் பெண் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளதாக கூறி, இன்னொரு தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில், அந்த பெண் இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் பிறந்ததாகவும் தற்போது நான் கொழும்புவில் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி பல நாட்களாக அதைப் பற்றி வெளியில் சொல்லாம இருந்ததாகவும், தற்போது அதை உங்கள் மூலம் கூறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். என்னைப் பற்றிய எந்த ஒரு தகவலும் வெளியில் தெரியவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அந்த பெண் கடந்த 2010-ஆம் ஆண்டு சென்னை சென்றுள்ளார். அப்போது நான் அவர் நடன இயக்குனர் கல்யாண மாஸ்டரை சந்தித்துள்ளார். அப்போது அவருடன் நடனம் ஆடுமாறு கேட்டுள்ளார்.

அவர் ஆடும்போது தகாத இடங்களில் அந்த பெண்ணை தொட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியான அந்த பெண் எனக்கு தலைவலி என கூறி அங்கிருந்து வெளியேறியுள்ளார். பின்னர் அன்று இரவு போன் செய்த கல்யாண் மாஸ்டர் தன்னுடன் நெருக்கமாக இருந்தால், அசிஸ்டன்ட் கோரியோகிராபர் பணி தருவதாக கூறியுள்ளார்.

இதனால் உடனடியாக போனை கட் செய்த அந்த பெண் சினிமா துறையே வேண்டாம் என்று மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளார்.