சிறையில் சக கைதிகள் செய்த செயல் : பித்துபிடித்தது போல் மாறிய அபிராமி!!

343

அபிராமி

இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு சிறையில் இருக்கும் அபிராமியை சக கைதிகள் புறக்கணிப்பதால் அவர் மன உளைச்சலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் விஜய். இவர் மனைவி அபிராமிக்கும், பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்துக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

காதலனுடன் ஓடிபோக நினைத்த அபிராமி தனது இரு குழந்தையை கொலை செய்தார். இதையடுத்து அபிராமி மற்றும் சுந்தரத்தை பொலிசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிறையில் அபிராமி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியான நிலையில் அதை அதிகாரிகள் மறுத்தனர்.
சிறையில் தன்னை குடும்பத்தினர் யாரும் சந்திக்க வராததால் அபிராமி மன உளைச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தான் செய்த தவறை நினைத்து சக கைதிகளிடம் புலம்பி வருகிறாராம் அபிராமி. அவருக்கு சக கைதிகள் சிலர் ஆறுதல் கூறினாலும் பெரும்பாலான கைதிகள் அவர் மீது வெறுப்பாகவே உள்ளனராம்.

அபிராமியிடம் முகம் கொடுத்துக்கூட பேசாமல் ஒதுக்குவதாக கூறப்படுகிறது. இதனால் பித்துபிடித்ததுப்போல் அவர் இருப்பதாக தெரியவந்துள்ளது.