சுசி லீக்ஸ்.. அதில் என்ன இருந்தது? கோபமாக பேசிய சின்மயியின் தாய்!!

382

கோபமாக பேசிய சின்மயியின் தாய்

பிரபல பாடகியான சின்மயி சமீபத்தில் கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். அது திரையுலகை மட்டுமின்றி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பின் சின்மயிக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து MeToo என்ற ஹாஷ் டேக்கை பயன்படுத்தி டுவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சின்மயியின் அம்மாவிடம் பிரபல தமிழ் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. அதில் ஏன் இப்போது திடீரென்று சின்மயி பேசுகிறார் என்று கேட்ட போது, நான் கூட அவளிடம் தற்போது 96 படத்தைப் பற்றி உனக்கு வாழ்த்துகள் குவிகிறது. இந்த நேரத்தில் இது தேவையா? என்றேன்.

உடனே அவள் யாரோ ஒருவர் என்னிடம் வந்து கூறுகிறார்கள், அவர்களுக்காக நான் போராடுவேன் என்று நம்பும் போது, இல்லை நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன், அதன் பின் உன்னுடைய கஷ்டத்தை கேட்கிறேன் என்று சொல்ல முடியாமா? என்றாள்.

மேலும் சினிமா வாழ்க்கை போதும் என்பதற்காக இப்படி செய்கிறாரா என்று கேட்ட போது, அப்படி இல்லை, நான் விளைவுகளை தெரிந்து கொண்டு தான் இறங்குவேன். ஆனால் அவள் அதைப் பற்றி எல்லாம் பயப்படுபவள் அல்ல, அவளை நினைத்து நானே பல முறை பெருமைபட்டுள்ளேன்.

தனக்கு நடந்ததைப் பற்றி கூறினால் சரி, ஆனால் மற்றவர்கள் கூறுவதை அவர் ஏன் டுவிட்டரில் பகிர்கிறார் என்ற போது, இந்த விடயத்தைக் கூட அவள் சொல்லியிருக்கமாட்டாள், ஒருவர் தன்னுடைய அனுபவத்தை சொல்லும் போது உங்களுடன் இணைத்து கொள்வீரகள் அது தான் இது. அதுவே அந்த பிரச்சனை உங்களுக்கு இல்லை என்றால் இது புரியாது என்றும் விளக்கமளித்துள்ளார்.

இதற்கு முன்னர் இதே போன்று பல பிரச்சனைகள் இருந்துள்ளது. சுசி லீக்ஸ், ஸ்ரீரெட்டி போன்றவை உள்ளது என்று கேட்கப்பட்ட போது, சுசி லீக்ஸ் பற்றி பேசாதீங்க, நான் கோபமடைந்துவிடுவேன்.

சுசி லீக்ஸில் அவள் சம்பந்தப்பட்டது என்ன இருந்தது? எங்கோ நடித்துக் கொண்டிருப்பவர்களுடையது தான் இருந்தது. இது எல்லாம் எடுத்து போட சுசிக்கு என்ன ஆச்சு? இதை எல்லாம் மறக்க முடியாது, இறுதியில் அவளுக்கு மனநிலை சரியில்லை என்று கூறிவிட்டனர்.

அதனால் தான் அமைதியாக இருந்தேன். அதுமட்டுமின்றி அவள் பெற்றோர் இல்லாமல் வளர்ந்தவள் அந்த காரணத்திற்காக அதை விட்டு போவது நல்லதே தவிர, மற்றவர்களை பொதுவெளியில் இழுத்துவிடுவது நல்லது கிடையாது, அவர் அவர்களின் விதியை, அவர்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.

இது எல்லாம் ஒரு தனி மனிதனுடைய ஒழுக்கத்தைச் சார்ந்தது, ஒரு பெண்ணையே, ஒரு பெண் சொல்வது என்பது வேதனை. அதிலிருந்து நிறைய மாறிவந்து விட்டோம், தற்போது நமக்கு என்ன தேவை MeToo என்பதை பார்ப்போம் என்று கூறியுள்ளார்.