அவர் என்னை கட்டாயப்படுத்தி உறவு கொண்டார் : ஸ்ரீரெட்டி லீக்ஸால் பரபரப்பு!!

361

ஒரு ஆந்திர தயாரிப்பாளரின் மகன் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ள புகார் ஆந்திர சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகில் பட வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது நடிகைகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழில் சுச்சி லீக்ஸ் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது போல், தெலுங்கில் ஸ்ரீ லீக்ஸ் வெளியாகியுள்ளது.

தெலுங்கு பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நபர்களை அம்பலப்படுத்துவேன் எனக் கூறிய நடிகை ஸ்ரீ ரெட்டி தனது சமூகவலைத்தள பக்கங்களில் சில புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன் பின், கடந்த 7ம் தேதி தெலுங்கு சினிமா சேம்பர் அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னை நடிகர் சங்க உறுப்பினராக அனுமதி அளிக்க மறுப்பதால் இந்த போராட்டம் நடத்துவதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீரெட்டி “தெலுங்கு பட உலகை ஆளும் ஒரு பெரிய தயாரிப்பாளரின் மகன் என்னை ஸ்டுடியோவிற்கு அழைத்தார். அங்கு நான் சென்ற போது என்னை கட்டாயப்படுத்தி என்னுடன் உறவு கொண்டார்.

அந்த ஸ்டுடியோ அரசுக்கு சொந்தமானது. அவரின் பெயரை விரைவில் வெளியிடுவேன். அந்த தயாரிப்பாளர் மகனின் லீலை புகைப்படங்களை விரைவில் வெளியிடுவேன்.

அதுவே என் பிரம்மாஸ்திரம்” எனக் கூறி ஸ்ரீரெட்டி மீண்டும் தெலுங்கு பட உலகில் பரபரப்பை கூட்டியுள்ளார்.