சொல்லக்கூடாத வார்த்தைகளால் என்னை திட்டினார்கள் : நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் கவலை!!

360

லஷ்மி ராமகிருஷ்ணன்

அடுக்குமாடி குடியிருப்பில் செயல்படும் சங்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி ஈவ் டீசிங் செய்தனர் என நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறேன். அங்கு செயல்படும் சங்கத்தால் சில பிரச்னைகள் ஏற்படுகின்றன. கடந்த 7ம் திகதி சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தபோது என்னைத் தகாத வார்த்தைகளால் சிலர் பேசினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து லஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகையில், நான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 2,600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 2015-ம் ஆண்டில் தான் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பத்திரப் பதிவு செய்யப்பட்டன.

இதன்பிறகு, அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம் அமைக்க பதிவுத்துறை அலுவலகத்துக்குச் சென்றோம். அப்போதுதான் 2013-ம் ஆண்டே எங்கள் குடியிருப்பில் உள்ள வீடுகளை முன்பதிவு செய்த சிலர் சங்கத்தைப் பதிவு செய்திருந்தது தெரியவந்தது.

வீடுகளை முன்பதிவுசெய்தவர்கள் எப்படி சங்கத்தைப் பதிவுசெய்ய முடியும்? என நான் உட்பட அங்கிருந்த பலர் கேள்வி எழுப்பினர். அதுதொடர்பாக சட்டரீதியான போராட்டத்தையும் மேற்கொண்டோம்.

இந்நிலையில், அக்டோபர் 7-ம் திகதி சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது. அப்போது நான் ஊடகத்தில் இருந்ததால், அனைவரும் என்னை எளிதாக டார்க்கெட் செய்தனர். மேலும், என்னை சிலர் தகாத வார்த்தைகளால் ஈவ்டீசிங்கும் செய்தனர். சொல்லக்கூடாத வார்த்தைகளாலும் என்னைத் திட்டி அசிங்கமாக பேசினர் என கூறியுள்ளார்.