துரத்திய வறுமை… விடாமல் சோதனையிலும் சாதனை படைத்த தமிழ் மாணவி!!

577

சாதனை படைத்த தமிழ் மாணவி

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பம் ஒன்றை சேர்ந்த மாணவி ஒருவர் வேலை செய்து கொண்டே படித்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். வறுமையை தனது படிப்பால் வெற்றி கண்டுள்ள அந்த மாணவி குறித்த பதிவை பார்க்கலாம்.

தேனி மாவட்டம், பூசலூர்த்து என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராமலக்ஷ்மி. நல்லான், அழகம்மாள் என்ற விவசாய கூலி தம்பதியின் 5 மகள்களில் நான்காவது மகள் இவர்.

தனது ஊரிலேயே அரச பள்ளி ஒன்றில் படித்த ராமலக்ஷ்மியால் தனது சகோதரிகள் போலவே 12ஆம் வகுப்பு வரையே படிக்க முடிந்தது. வறுமை துறத்த படிப்பை தொடர முடியாமல் போனது, உகோவையில் உள்ள தனியார் ஆலையம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். ஆலையில் படித்து கொண்டே வேலை செய்ய கிடைத்த வாய்ப்பை ராமலக்ஷ்மி தவரவிடவில்லை.

கல்லூரி படிக்க வைக்கும் அளவுக்கு பெற்றோர்களுக்கு வசதியில்லை. அதனால் நான் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். பின்னர் படித்து கொண்டே வேலை செய்யும் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. அதற்கமைய படித்து கொண்டே வேலை செய்தேன் என ராமலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.

தாம் பயிற்சி BCA துறையில் 79 சதவீத மதிப்பெண்களை பெற்று தங்கம் வென்றுள்ளார் இந்த சாதனை நாயகி. மேலும் கனடாவின் காமன்வெல்த் வழங்கும் சிறப்பு விருதையும் பெற்றுள்ளார். சிறப்பு விருதுடன் பரிசாக பெற்ற 25000 ரூபாயில் மேற்படிப்பை படிக்கவுள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கிறார் ராமலக்ஷ்மி.

“எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் பட்டதாரி. CEMCA AWARD பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை” என ராமலக்ஷ்மி குறிப்பிட்டுள்ளார்.

விவசாய கூலிகளாக இருந்தாலும் தங்கள் மகள்களை ஆழாக்கி அழகு பார்க்க நினைக்கும் ஏழை தம்பதிகளுக்கு தங்கள் மதிப்பெண்களாலும், தங்கத்தாலும் பெறுமை சேர்த்துள்ள ராமலக்ஷ்மி மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கின்றார் என்றால் அது மிகையல்ல.