பலாத்காரம் செய்யவில்லை : செய்தியாளர்களிடம் கத்திய சின்மயி!!

744

கத்திய சின்மயி

செய்தியாளர் சந்திப்பின் போது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு என நிரூபர் கூறியதற்கு சின்மயி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சின்மயி, லஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர் ஒருவர், சீனியர் நடிகைகள் யாரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் சொல்லாத போது நீங்கள் மட்டும் ஏன் சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சின்மயி, அது பலாத்காரம் இல்லை, பலாத்காரத்துக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் உங்களுக்கு வித்தியாசமே தெரியவில்லை என கத்தினார். உடனே அருகில் இருந்த நடிகை இது பாலியல் துன்புறுத்தல் என கூறினார். இதையடுத்து சீனியர் நடிகை புகார் கொடுக்காதது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் கூறினார்.

என்னை விபச்சாரி என்று கெட்ட வார்த்தைகளால் திட்டினார்கள் : சின்மயி வேதனை : மீடூ எழுச்சி மூலம் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியுள்ள பாடகி சின்மயி, விரைவில் வைரமுத்து மீது வழக்கு தொடருவேன், அதற்கான ஆதாரங்களை தேடிக்கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, நான் சாதரண குடும்பத்தை சேர்ந்த பெண். எனது அம்மா விவாரத்து செய்துகொண்ட பின்னர் தனி ஆளாக என்னை வளர்க்க சிரமப்பட்டார்.

2003 ஆம் ஆண்டு நான் தமிழக மீனவர்கள் குறித்து தவறாக பேசியதாக வெளியான பொய்யான தகவலால், நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். நான் ஒரு விபச்சாரி என விமர்சித்து அசிங்கமாக திட்டினார்கள்.

இது தொடர்பாக நாங்கள் காவல்துறையை அணுகி, பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளானோம். இந்த பிரச்சனைக்கு பிறகு எதற்காக, இப்படி காவல்துறைக்கு வந்தோம் என நானும் எனது அம்மாவும் நொந்துகொண்டோம்.

நான் தற்போது வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துள்ளேன். ஆனால் என்னை போன்று பல பெண்களும் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், எனது கணவர் எனக்கு கொடுத்த ஆதரவு போன்று, அந்த பெண்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

தற்போது கூட, நான் வைரமுத்து கொடுத்துள்ள பாலியல் புகாருக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, எனக்கு கெட்ட வார்த்தைகளால் மெசேஜ் அனுப்புகிறார்கள்.

2005 ஆம் ஆண்டில் நான் பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், அப்போது இருக்கும் சட்டங்களை பயன்படுத்தி வழக்கு தொடர்வேன் என கூறியுள்ளார்.