சீரிய சிம்புவின் புரட்சி எதிரொலி : கர்நாடகாவில் பெருகி வரும் இளைஞர்களின் ஆதரவு!!

214

சிம்புவுக்கு கர்நாடக மக்கள் இடையே ஆதரவு பெருகி வருகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்து திரையுலகினர் நடத்திய மவுன போராட்டத்தில் சிம்பு கலந்து கொள்ளவில்லை.

தங்களின் தேவைகளை அரசிடம் கூறி பெற முடியாதபோது மக்களுக்காக அவர்கள் போராடுவதில் பயன் இல்லை என்ற உண்மையை போட்டுடைத்திருந்தார் சிம்பு.

நடிகர் சிம்பு உணர்பூர்வமாகவும் உணர்ச்சிகரமாகவும் பேசியதை பல அரசியல் பிரமுகர்கள் கிண்டலடித்து வந்தனர்.

இதில் முக்கியமாக UniteForHumanity என்ற டாக்கை கிரியேட் செய்து கர்நாடக மக்கள் தண்ணீர் தர விரும்பினால் இந்த டாக்கை பயன்படுத்தி ஒரு டம்லர் தண்ணீர் கொடுத்து தங்களது ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

பெரிய ஆச்சரியம் என்னவென்றால் கர்நாடக மக்கள் இந்த டாக்கை பயன்படுத்தி தங்களது ஆதரவை பலர் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

சிம்பு காவிரி பிரச்சினையை அரசியல்வாதிகள் அல்லாமல் இரு மாநில மக்களும் சமாதானமாக பேசி தீர்க்க வேண்டும் என்று ஒரு ஐடியா கொடுத்தார்.

அரசியல்வாதிகளை ஓரங்கட்டிவிட்டு மக்களே சமாதானமாக பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற சிம்புவின் ஐடியாவுக்கு கர்நாடகாவில் ஆதரவு கிடைத்துள்ளது.

சிம்பு என்ன அருமையான யோசனை தெரிவித்துள்ளார். எங்களுக்கு வன்முறை அரசியல் பிடிக்கவில்லை. சிம்புவை எங்களுக்கு பிடித்துவிட்டது.

இனி அவர் படங்கள் இங்கு ரிலீஸானால் அமோக வரவேற்பு கொடுப்போம் என்றும் கர்நாடக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து சிம்பு அரை மணிநேரமாக பேசிய வீடியோவை கர்நாடக மக்கள் தேடிப்பிடித்து பார்த்து வைரலாக்கியுள்ளனர்.