புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை : ஸ்ரீ லீக்ஸ்!!

115

தெலுங்கு நடிகர் சங்கம் தனக்கு உறுப்பினர் அட்டை தர மறுப்பதாக ஐதராபாத்தில் உள்ள திரைப்பட வர்த்தகசபை அலுவலகம் எதிரில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி அதிர வைத்தார் நடிகை ஸ்ரீரெட்டி.

மேலும், தெலுங்கு திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாகவும், இருட்டில் இருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக இவ்வாறு செய்கிறேன். அதுமட்டுமின்றி, தயாரிப்பாளர் ஒருவரின் மகன் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது எனக்கூறி பரபரப்பை ஏற்பட்டுத்திய இவர், தற்போது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன் அபிராம் டகுபதியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அபிராம் டகுபதி, பிரபல நடிகர் ராணாவின் சகோதரர் ஆவார்.

அபிராம் டகுபதி, ஸ்டூடியோவில் வைத்து தன்னை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என கூறியுள்ளார்.இந்த புகைப்படத்தால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.