தமிழ் புத்தாண்டுப் பலன்கள் 2018 – கும்பம்

1375

பாசத்தால் அனைவரையும் கட்டிப் போடுபவர்களே! கடமைத் தவறாதவர்களே! காரியத்தில் கண்ணாக இருந்து காய் நகர்த்துபவர்களே! உங்களுடைய சப்தமாதிபதியான சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த 2018ம் ஆண்டு பிறப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை அதிகரிக்கும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.

இந்த 2018ம் ஆண்டு முழுக்கவே உங்களுடைய ராசிநாதனும் விரையாதிபதியுமான சனிபகவான் ராசிக்கு லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தன்னம்பிக்கையுடன் தலை நிமருவீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் அஷ்டமதனாதிபதியுமான குருபகவான் 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பல முறை முயன்றும் முடிக்க முடியாத வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள்.

தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவர்வழி உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 10ம் வீட்டில் நுழைவதால் சிறுசிறு அவமானம், ஏமாற்றம் வந்து நீங்கும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் அச்சப்படுவீர்கள்.

1.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியன் சனியுடன் சேர்வதால் இக்காலக்கட்டத்தில் போராட்டங்களைச் சமாளிக்கும் பக்குவம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்விக சொத்தால் வருமானம் வரும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால் சின்ன சின்ன காரியங்கள் கூட தடைப்பட்டு முடிவடையும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும்.

எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். பணப்பற்றாக்குறையும் இருக்கும். மற்றவர்களுக்கு ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. சொத்துக்களை விற்கும் போதும் ஏமாந்துவிடாதீர்கள்.

சிலர் சின்ன தொகையை முன்பணமாக கொடுத்து விட்டு ஆறு மாதம், ஏழு மாதம் கழித்து மீதித் தொகை தராமல் இழுத்தடிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். 02.05.2018 முதல் 30.10.2018 வரை ராசிநாதன் செவ்வாய், கேதுவுடன் இணைவதால் சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாமல் போகும். தவறு செய்யாமலேயே உங்களை சிலர் குற்றவாளியாக்க முயற்சி செய்வார்கள். கூடாப்பழக்க வழக்கங்களை தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கியும் பேச வேண்டாம், தூக்கியும் பேச வேண்டாம்.

பணம் வாங்கித் தருவதிலும், கல்யாண விஷயத்திலும் குறுக்கே நிற்காதீர்கள். 11.6.2017 முதல் 04.7.2018 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் அலைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். வாகனம் பகுதாகும். கணவன்-மனைவிக்குள் யார் ஜெயிப்பது, யார் தோற்பது என்ற போட்டிகளெல்லாம் வேண்டாம்.

புத்தாண்டு தொடக்கம் முதல் வருடம் முடியும் வரை ராகு 6ம் வீட்டில் தொடர்வதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள்.

எங்குச் சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். உங்களுக்கும் அயல்நாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். புது பதவிகள் தேடி வரும்.

ஆனால் கேது 12ம் வீட்டில் நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். சில நாட்களில் தூக்கம் குறையும். திட்டமிடாத பயணங்களும், அலைச்சல்களும் இருந்துக் கொண்டேயிருக்கும். உறவினர் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசத்தை நீங்களே செலவு செய்து எடுத்து நடத்துவீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

வியாபாரிகளே! இரட்டிப்பு லாபம் உண்டாகும். அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். வேற்றுமொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டு. வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். கடையை விரிவுபடுத்தி, அழகுப்படுத்துவீர்கள்.

முக்கிய சாலைக்கு மாற்றுவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், லெதர், ஆட்டோ மொபைல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். விலகிச் சென்ற நம்பிக்கையான பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்யோகஸ்தர்களே! தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சில சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களும் மதிப்பார்கள்.

கன்னிப் பெண்களே! சமயோஜித புத்தி அதிகரிக்கும். எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். வேலை கிடைக்கும். கல்வியும் இனிக்கும், காதலும் இனிக்கும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள்.

மாணவ-மாணவிகளே! பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். அதிக மதிப்பெண் பெறுவீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை இப்பொழுது உணருவீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். கட்டுரை, கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு, பாராட்டைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! அனைத்துக் கட்சியினரையும் அனுசரித்துப் போகும் மனப்பக்குவம் வரும். போட்டிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். மாநில அளவில் புது பொறுப்புகள் தேடி வரும்.

கலைத்துறையினரே! அயராத உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். உங்களுடைய படைப்புத் திறன் வளரும்.

விவசாயிகளே! தண்ணீர் வரத்து அதிகரிக்கும். தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். அடகிலிருந்த பத்திரங்களை மீட்க கடன் உதவிகள் கிடைக்கும். பூச்சித் தொல்லை, வண்டுக் கடியிலிருந்து பயிரை காப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். இந்த 2018ம் ஆண்டு உங்களை விஸ்வரூபமெடுக்க வைப்பதுடன், திடீர் யோகங்களையும், வெற்றியையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்:திருவள்ளூருக்கு அருகேயுள்ள திருப்பாசூர் வாசீஸ்வரரை தரிசித்து வாருங்கள். மரக்கன்று நட்டு பராமரியுங்கள்.